ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு வெள்ளி வாகனங்கள் அர்ப்பணம்!

Photo of author

By Sakthi

ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு வெள்ளி வாகனங்கள் அர்ப்பணம்!

Sakthi

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் எதிர்வரும் மாதம் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது இதனை தொடர்ந்து பக்தர்கள் திரட்டிய நிதியில் 15 லட்சம் ரூபாய் செலவில் வெள்ளி கமல வாகனம் மற்றும் அனந்த வாகனம் செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலிலுள்ள சிற்ப ரத்னா கலைக்கூடத்தின் சென்ற 6 மாத காலமாக நடைபெற்று வந்தது.

இந்த பணிகள் முழுவதும் முடிவடைந்ததை தொடர்ந்து இந்த வாகனங்கள் சிற்பி செல்வராஜா தலைமையில் சிறப்பு பூஜைக்கு பின் மினி லாரியில் ஏற்றப்பட்டு திருவட்டார் தனியல் கருடாழ்வார் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது.

இனி தொடர்ந்து அங்கே சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது, அதன்பிறகு மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டார்.

அங்கே கோவிலை வலம் வந்த பிறகு உதயமார்த்தாண்ட மண்டபம் முன்புள்ள மண்டபத்தில் 2 வாகனங்களும் கோவில் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது, இதில் பக்தர்கள் பங்கேற்று கொண்டார்கள்.