பள்ளிகளை திறப்பதாக இருந்தால் இதை செய்யலாம் – ஐ.சி.எம்.ஆர் தலைவர்!

Photo of author

By Hasini

பள்ளிகளை திறப்பதாக இருந்தால் இதை செய்யலாம் – ஐ.சி.எம்.ஆர் தலைவர்!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பது நாம் அறிந்த விஷயமே ஆகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகள் வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் மட்டுமே பாடங்களை கற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டு தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்கலாமா? என மத்திய, மாநில அரசுகள் யோசித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் பள்ளிகள் திறப்பது என்றால் தொடக்கப் பள்ளியில் இருந்து தொடங்குவது சரியாக இருக்கும் என்று ஐ.சி.எம்.ஆர் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் கூறிய போது பெரியவர்களை விட கோரோனாவை சிறிய குழந்தைகள் மிகவும் திறம்பட கையாள முடியும் என்பது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் இந்தியாவில் பள்ளிகளை திறக்க முடிவு செய்து பணிகளை ஆரம்பித்தால், முதலில் தொடக்கப் பள்ளியிலிருந்து வகுப்புகளை தொடங்க ஆரம்பிக்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பள்ளிகளில் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டதை உறுதி செய்த பின் துவக்கப்பள்ளிகளை திறக்கலாம் என்றும் கூறினார். இதைப் போலவே  ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் கூட இதுபோல துவக்கப்பள்ளிகளைத்தான் முதலில் திறந்து நடத்தி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.