கொரோனாவை காரணமாக வைத்து இதை தவிர்க்க முடியாது! அமைச்சர் சொன்ன தகவல்!

Photo of author

By Hasini

கொரோனாவை காரணமாக வைத்து இதை தவிர்க்க முடியாது! அமைச்சர் சொன்ன தகவல்!

Hasini

This cannot be avoided due to the corona! Information told by the Minister!

கொரோனாவை காரணமாக வைத்து இதை தவிர்க்க முடியாது! அமைச்சர் சொன்ன தகவல்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இன்னும் பத்து நாட்கள் வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத் தொடரில் பெகசாஸ் விவகாரம் குறித்து எதிர் கட்சிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது. அந்த பிரச்சினை நாடாளுமன்றத்தில்  பூதாகரமாக வெடித்தது.

இப்பிரச்சினை குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட  வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த மூன்று நாட்களாகவே மக்களவை முடங்கியுள்ளது. நான்காம் நாளான இன்றும் பெகாசஸ் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் விவசாயிகள் போராட்டம் வாபஸ் விவகாரம் தொடர்பாக விஷயங்களை பேசி அவையை ஒத்தி வைத்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. மேலும் மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கொரோனா மூன்றாம் அலை காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யும்படி திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பிரவீன் இவ்வாறு பதிலளித்துள்ளார்.