சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 3 தோல்வியை சந்தித்திருப்பதால் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது ஐபிஎல் போட்டி துவங்குவதற்கு முன்பாக கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகிய சூழ்நிலையில், ஜடேஜா புதிய கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த சென்னை அணி 3வது போட்டியில் வெற்றி பெறும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனாலும் சென்னை அணி மிக மோசமாக பேட்டிங் செய்த காரணத்தால் 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இந்த சூழ்நிலையில், ஜடேஜாவின் தலைமை குறித்து சென்னை அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சனம் செய்திருக்கிறார். களத்தில் எப்போதும் மகேந்திர சிங் தோனி தான் கேப்டனாக செயல்படுகிறார் ஜடேஜா தனக்கும் கேப்டன் பதவிக்கும் சம்பந்தமே இல்லாதது போல நின்று கொண்டிருக்கிறார் என தெரிவித்திருக்கிறார்.
அதோடு பவுண்டரி லைனில் நின்று கொண்டு ஃபீல்டிங் செய்தால் எந்த கேப்டனாலும் தன்னுடைய அணியை வழிநடத்த இயலாது இதன் காரணமாக, தொனிக்குத்தான் தேவையில்லாத தலைவலி என்றே தோன்றுகிறது என அவர் தெரிவித்திருக்கிறார்.
புதிதாக கேப்டனாக பொறுப்பேற்றிருக்கக்கக்கூடிய ஜடேஜா இது போல தன்னுடைய சுமையை மற்றவர் மீது ஏற்றி வைத்துவிட்டு இருக்கக்கூடாது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.