ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வாங்க செல்வோருக்கு இது கட்டாயம்!!

0
210

ரேஷன் கடையில் பொங்கல் பரிசு வாங்க செல்வோருக்கு இது கட்டாயம்!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு நியாய விலை கடைகளில் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பினை வெளியிட்டது.

வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருக்கும் முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன் அடிப்படையில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை உடன் 1000 ரூபாய் பொங்கல் தொகுப்பு பரிசாக வழங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வருகின்ற டிசம்பர் 30 தேதி முதல் தொடங்கி 5 நாட்களுக்கு விநியோகிக்கும் பணி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பிற்காக பிரத்யேக பைகள் தயாரிக்கப்பட்டு அதில் அரசு முத்திரை மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் அச்சடிக்கப்பட்ட பைகளில் பொருட்கள் போட்டு தரப்படும்.

ஆனால் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்குவதற்கு பைகள் எதுவும் வழங்கப்படாது என்றும், அதனால் பொதுமக்கள் மறக்காமல் வீட்டில் இருந்தே பைகள் எடுத்து வர வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி கேட்டுக் கொண்டுள்ளார்.

.

Previous articleபிஎஃப் 7 கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து! அடுத்த மாதம் அறிமுகம்!
Next articleசீனாவிலிருந்து மதுரை வந்த தாய் மகளுக்கு கொரோனா உறுதி! அச்சத்தில் மக்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here