உங்கள் வீட்டில் இது கட்டாயம் இருக்க வேண்டும்! மின்சார வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! 

Photo of author

By Sakthi

உங்கள் வீட்டில் இது கட்டாயம் இருக்க வேண்டும்!! மின்சார வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!
அனவருடைய வீடுகளிலும் ஆர்சிடி எனப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் பெருத்த வேண்டும் என்றும் அதன். அவசியம் பற்றியும் தமிழ்நாடு மின்சார வாரியம் தற்பொழுது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “எங்க வீட்ல RCD இருக்கு உங்க வீட்ல
உங்கள் வீட்டில் RCD பொருத்திய புகைப்படங்களை எடுத்து, Twitter-ல் #TANGEDCO_RCD_Safety என்ற ஹேஷ்டேக்குடன் பதிவேற்றவும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) மின்சார பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக, அனைத்து வீடுகளிலும் RCD பொருத்துவதை கட்டாயமாக்கியுள்ளது.
உங்கள் வீட்டில் RCD இன்னும் பொருத்தவில்லை என்றால், உடனடியாக பொருத்துங்கள். நம் அன்பானவர்களின் உயிரைக் காப்போம்” என்று பதிவிட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையச் செயலாளர் அவர்கள் “தமிழகத்தில் மின் பழுது காரணமாகவும் மின் கசிவு காரணமாகவும் விபத்துக்கள் ஏற்படுகின்றது. அந்த சமயம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. இந்த உயிரிழப்புகளை தடுக்க உதவி செய்யும் கருவிதான் ஆர்சிடி எனப்படும் ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் கருவி ஆகும்.
எனவே மின் கசிவால் ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்கும் வகையில் புதியதாக மின்சார இணைப்புகளை பெறும் நபர்களுக்கு இந்த ஆர்சிடி கருவை பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.  விலை மதிப்பற்ற மனித உயிர்களை பாதுகாக்கும் வகையில் புதிய மின் இணைப்புகளை பெறுபவர்கள் மட்டுமில்லாமல் தற்பொழுது மின் இணைப்பு வைத்துள்ள அனைத்து நுகர்வோர்களும் இந்த ஆர்சிடி கருவியை பெருத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஏற்கனவே இந்த ஆர்சிடி கருவியை பொருத்தி இருந்தால் மழை காலங்களில் மின்கசிவு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும். ஆகவே இனிமேல் மின் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் வீடு, கடை, தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பண்ணை வீடுகள் என்று அனைத்து விதமான நுகர்வோர்களும் இந்த ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் கருவியை பெருத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். எனவே அனைத்து மின் நுகர்வோர்களும் இந்த ஆர்சிடி கருவியை தங்கள் வீடுகளில் பொருத்தி உயிர் சேதத்தை தடுக்க வேண்டும்.