நடிகர் அஜித் அவர்களின் அடுத்த டார்கெட் இது தான்!! மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவிப்பு!!

0
109
This is actor Ajith's next target!! Manager Suresh Chandra Announcement!!
This is actor Ajith's next target!! Manager Suresh Chandra Announcement!!
நடிகர் அஜித் அவர்களின் அடுத்த டார்கெட் இது தான்!! மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவிப்பு!!
நடிகர் அஜித் அவர்கள் தற்போது மேற்கொண்டு வந்த பூட்டான் சுற்றுப் பயணம் நிறைவடைந்துள்தை அடுத்து நடிகர் அஜித் அவர்களின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் அடுத்து அவர் என்ன செய்ய இருக்கிறார் என்பதையும் தெரிவித்துள்ளார்.
துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குநர் மகிழ் திருமேனி அவர்கள் இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை லைக் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அனிருத் இசையமைக்கவுள்ளார். துணிவு படத்திற்கு பிறகு கடந்த சில தினங்களாக நடிகர் அஜித் அவர்கள் பூடான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். இந்த சுற்றுப்பயணம் முடிவடைந்து உள்ளதாக நடிகர் அஜித் அவர்களின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சந்திரா அவர்கள் டுவிட்டர் பக்கத்தில், “நடிகர் அஜித் அவர்கள் தற்போது நேபாளம், பூடான் ஆகிய நாடுகளிலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டார். அடுத்ததாக நடிகர் அஜித் அவர்கள் 2023வது வருடம் நவம்பர் மாதம் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்” என்று கூறியுள்ளார்.