இது முற்றிலும் பாஜக சித்தாந்தத்திற்கு எதிரானது! திமுகவை நேரடியாக தாக்கிய அண்ணாமலை!

Photo of author

By Sakthi

வரும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகள் திறக்கப்பட இருக்கின்றன. அந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் ,பங்கேற்க இருக்கிறார்கள்.

தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேர் எதிர் சித்தாந்தங்களை கொண்டவர்களாக இருப்பினும், இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநில அரசு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு பிரதமர் நரேந்திர மோடி இசைவு அளித்து இருப்பதாகவும், சொல்லப்படுகிறது.

ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்த போதெல்லாம் கோபேக் மொடி என்று தன்னுடைய வலைத்தள பக்கத்தில் செய்தி வெளியிட்டு அதனை தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் ட்ரண்ட் செய்து பிரதமர் நரேந்திர மோடியை அவமானப்படுத்தியது.

ஆனால் தற்போது திமுக ஆட்சி அமைந்து இருக்கின்ற சூழ்நிலையில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திப்பதற்கு முதலமைச்சர் நேரம் கேட்கிறார். அதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் இசைவு அளித்திருக்கிறார். இதுபோன்ற பல சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது, பிரதமர் நரேந்திரமோடியின் வருகையை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, அண்ணாமலையை கைது செய்து பார்க்க இயலுமா? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எதற்காக கூறினார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். முல்லை பெரியாறு அணை விவகாரம், பெட்ரோல் டீசல் விலை குறைக்க வேண்டும் என்று தெரிவித்து பாஜக நடத்துகின்ற அனைத்துப் போராட்டங்களும் பொதுமக்களுக்கானது. மக்கள் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் போராட்டம் நடத்துகிறோம் என கூறியிருக்கிறார்.

பாஜக நடத்தும் ஒவ்வொரு போராட்டமும் வெற்றியை கொடுத்திருக்கிறது அரசு செய்த தவறை திருத்தி வருகிறது. இது பொது மக்களுக்கு கிடைத்த வெற்றி டிஜிபி சைலேந்திரபாபு சைக்கிள் ஒட்டி செல்பி எடுக்கிறார் என்று தனிப்பட்ட முறையில் நான் விமர்சனம் செய்யவில்லை முறைப்படிதான் விமர்சனம் செய்திருக்கிறேன் தராசு போல இருக்க வேண்டிய காவல்துறை சில இடங்களில் சமமாக இல்லை நாட்டின் இறையாண்மைக்கு எதிராக ஒரு சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது உள்ளூர் காவல் துறையினரின் செயல்பாடுகளில் திமுகவினர் தலையிடுகிறார்கள் இதன் வெளிப்பாடுதான் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள். ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும், வாரிசு அரசியல், தாத்தாவுக்கு பிறகு மகன், மகனுக்கு பின்னர் பேரன், என்று தொடர்ந்து ஆட்சி செய்யும் முறை பாஜக சித்தாந்தத்திற்கு எதிரானது எனக் கூறியிருக்கிறார்.

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில் திமுகவை சேர்ந்தவர்கள் கோபேக் மொடி என்று அவரை திருப்பி போகச்சொல்லி ட்விட் செய்தார்கள். ஆனால் ஸ்டாலின் முதலமைச்சர் ஆனவுடன் அவரை சந்திப்பதற்கு பிரதமர் நேரம் கொடுக்கின்றார். தற்சமயம் தமிழகத்திற்கு பிரதமர் வருகை தர இருக்கிறார். அவருடைய வருகையை தமிழக அரசு சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.