இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா அவர்களின் அடுத்த காதலி யார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இந்திய கிரிக்கெட்டில் டிஸ்ட்ரிக், ஸ்டேட் என்று அனைத்து வித கிரிக்கெட் தொடர்களிலும் சிறப்பாக விளையாடி பின்னர் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு அறிமுகமாகி சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா அடுத்து இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். இந்திய அணியில் டி20, டெஸ்ட், ஓடிஐ என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி பிரபலமான ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாகவும் தேர்வானார்.
இதையடுத்து ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிச் இருவரும் காதலித்து கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் உள்ளான். இந்நிலையில் 4 வருடமாக எந்தவொரு பிரச்சனையும் இல்லாத நிலையில் இவர்கள் இருவரும் சுமுகமாக பேசி விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா அவர்களும் இங்கிலாந்தை சேர்ந்த பாடகி ஜாஸ்மின் வாலியா இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
யார் இந்த ஜாஸ்மின் வாலியா என்பது குறித்து பார்க்கலாம். ஜாஸ்மின் வாலியா அவர்கள் இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதிக்கு மகளாக பிறந்தார். இவர் பிரபல பாடகி மற்றும் தொலைக்காட்சி பிரபலமும் ஆவார்.
ஜாஸ்மின் வாலியா முதன் முதலில் 2010ம் ஆண்டு ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவானா ‘தி ஒன்லி வே இஸ் எசெக்ஸ்’ ஷா மூலமாக பிரபலமடைந்தார். அதன் பின்னர் தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமடைந்த ஜாஸ்மின் வாலியா 2012ம் ஆண்டுக்குள் முழு நடிகையாக மாறினார்.
பிரபலமான நடிகையாக மாறிய ஜாஸ்மின் வாலியா 2014ம் ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி ஜாக் நைட், இண்டென்ஸ் டி, ஒல்லி கிரீன் போன்ற இசை கலைஞர்களுடன் இணைந்து தன்னுடைய திறமையை உலகறியச் செய்தார்.
மேலும் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளரான அசிம் ரியாஸ் அவர்களுடன் இணைந்து நைட் அன்ட் ஃபைட்ஸ் என்ற இசை ஆல்பத்திலும் வேலை செய்துள்ளார்.
உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஜாஸ்மின் வாலியா அவர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6.4 லட்சம் பேர் பின் தொடரும் நிலையில் யூடியூபில் உள்ள இவருடைய சேனலை 5.7 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இவ்வாறு பிரபலமாக இருக்கும் ஜாஸ்மின் வாலியா அவர்களை காதலிப்பது குறித்து ஹர்திக் பாண்டியா எப்பொழுது அறிவிப்பார் என்று பொறுத்திருத்து பார்க்கலாம்.