புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டும் போது இனி இது அவசியம்! கருத்தில் கொள்ள சொன்ன தமிழக அரசு!
தமிழகத்தில் இனி புதிதாக கட்டப்படும் இரண்டு மாடுகளுக்கு மேல் உள்ள கட்டிடங்கள் அனைத்திற்கும் கட்டாயம் பின்தாங்கி வசதி அதாவது லிப்ட் வசதி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் இன்று வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சி கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இனிமேல் இரண்டு அடுக்கு மாடிகளுக்கு மேல் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடங்களில் கட்டாயம் லிப்ட் வசதி இருக்க வேண்டும் என்றும், அதோடு சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை உள்ளிட்ட வசதிகளையும் செய்ய வேண்டும் என்றும், பார்வையற்றோருக்கான அறிவிப்புப் பலகைகள், மற்றும் தனி வாகனம் நிறுத்துமிடம் ஆகியவையும் கட்டப்பட வேண்டியது கட்டாயம் என்றும் அந்த அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது திமுக ஆட்சியில், முதல்வர் அவர்கள், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கு மகிழ்ச்சி அளித்து வருகின்றார். அதில் தற்போது மாற்று திறனாளிகளுக்காக இந்த வசதிகளை நடைமுறைபடுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது அந்த மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.