சேலம் கோவில்களில் இனி இதுதான் நடைமுறை! மகிழ்ச்சியில் பக்தர்கள்! 

Photo of author

By Hasini

சேலம் கோவில்களில் இனி இதுதான் நடைமுறை! மகிழ்ச்சியில் பக்தர்கள்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியில் பொறுப்பேற்றார். மேலும் அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஒவ்வொன்றாக செயல்படுத்தியும் வருகிறார். மேலும் மக்களிடம் மிகவும் நற்பெயரும் பெற்று வருகிறார்.

ஒவ்வொன்றாக செயல்படுத்திவரும் அவர், கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்வது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறார். தற்போது அதை நடைமுறையும் படுத்தி விட்டார் என்றே கூறலாம். அதன்படி தற்போது சேலத்தில் அதற்காக சுகவனேஸ்வரர் கோவிலை தேர்வு செய்துள்ளனர்.

இது குறித்து சேலம் மண்டல ஹிந்து சமய அறநிலைய துறை சார்பில் சொல்லும்போது, ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் உள்ள கோவிலில், முதல் கட்டமாக தமிழில் அர்ச்சனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும், அதன்படி சேலம் மண்டலத்தில் சுகவனேஸ்வரர் கோவில் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இங்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வருவதாகவும், தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் உப கோவில்களான ராஜகணபதி கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் முதலியவற்றிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை என்று பெயர் பலகை வைக்கப்படும் எனவும், மேலும் அதில் அர்ச்சகரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிக்கப்பட்டும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டம் நடைமுறைபடுத்தும் போது சேலத்திலும் பின்பற்றப்படும், என்றும் அவர் கூறினார்.