ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருந்த நேரத்தில், அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டு இருந்தார் . அதே போல கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவிமணியன் நியமிக்கப்பட்டிருந்தார். ரஜினிகாந்தின் கட்சியை ஒரு பலமான கட்சியாக கட்டமைக்கும் வேலையை இவர்கள் செய்து வந்தார்கள் ஆனாலும் தொற்று பரவல் காரணமாக, அவருடைய உடல்நிலை போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து பார்த்த ரஜினிகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதுமில்லை என்று தெரிவித்து விட்டார். இதன் காரணமாக ரஜினியின் ஆதரவாளர்களும் அவருடைய ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயின.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இதுபோன்ற அறிவிப்பு காரணமாக, சோர்ந்துபோன தமிழருவிமணியன் அரசியலில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ஆனாலும் ரஜினிகாந்துடன் தொடர்ச்சியாக பயணப்பட போவதாகவும் ரஜினியின் மக்கள் மன்றம் மூலமாக மக்களுக்கு சேவை செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்..
மறுபுறம் அர்ஜுன மூர்த்தியோ தான் விரைவாக தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்க இருக்கிறேன் என்றும் சொல்லியிருந்தார் .அந்த விதத்தில் அவர் தன் வலைதள பக்கத்தில் மாற்றத்தின் வழியில் புதிய பயணம் என ஒரு கடிதத்தை வெளியிட்டு இருக்கின்றார். இன்றைய தினம் காலை சுமார் பதினொரு மணி அளவில் அர்ஜுன மூர்த்தி பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கிறார். அந்த சமயத்தில் அவர் தன்னுடைய அரசியல் நிலை குறித்து ஒரு முக்கியமான அறிவிப்பை தெரிவிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.
புதிய கட்சியை ஆரம்பித்து எதிர் வரும் சட்டசபை தேர்தலில் நிற்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு அவருக்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை என்று சொல்கிறார்கள்.