ம.நி.மவுடன் கூட்டணி அமைக்கும் தி.மு.க ! காரணம் என்ன தெரியுமா?

0
144
  • சமீபகாலமாக எதிர்க்கட்சியான திமுக நடிகர் கமல்ஹாசனின் கட்சியான மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி அமைப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறது.

அதே சமயத்தில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதும், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடுவதும் ஆக இருப்பதும், கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. ஆகவேதான் திமுக அவரை தன்னுடைய கூட்டணிக்குள் ஐக்கியமாகி விட வேண்டும் என்று நினைக்கிறது. என பரவலாக பேசப்படுகிறது.

ஆனாலும் திமுகவின் கணக்கு வேறுமாதிரியாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆம் கமல்ஹாசன் திமுக கடைபிடித்து வரும் கொள்கைகளைத்தான் பின்பற்றுகிறார் என்று நினைக்கிறார்கள் அந்த கட்சியினர். ஆகவேதான் இந்த முயற்சிகள் மிகத் தீவிரமாக இருக்கிறது. சமீபத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசனை சந்தித்து பேசியதாகவும், அதில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், செய்திகள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் ஒரு நடிகர் அதன் காரணமாக, அவர் மக்கள் மத்தியில் முன்னரே பரிச்சயமானவர் தான் இப்பொழுது அவர் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது அவருக்கு இன்னொரு பலமாக இருக்கிறது. சரி அவருடைய இந்த மக்கள் பலத்தை திமுக எதை அடிப்படையாக வைத்து பெறும் என்பதை பார்ப்போமா?

நடிகர் கமல்ஹாசன் அசின் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம்தான் தசாவதாரம், இந்த திரைப்படமானது இரண்டாயிரத்தி எட்டாம் ஆண்டு வெளிவந்தது. சரி இந்த திரைப்படத்திற்கும் இந்த கூட்டணிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இருக்கிறது அந்த திரைப்படத்தில் கதாநாயகி அசின் ஒரு கடவுள் பற்றாளராக இருப்பார். அதே சமயத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு கடவுள் நம்பிக்கை அற்றவர் போல நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் அவர் பேசிய வசனங்கள் அழுத்தமாக இல்லாவிட்டாலும் மக்களின் மனதில் அது எந்த மாதிரியான தாக்கத்தை உருவாகி இருக்கிறதோ அது நமக்கு தெரியாது.

ஆனாலும் அவர் அந்த திரைப்படத்தின் இடையிடையே தெரிவிக்கும் ஒரு சில கருத்துகள் கடவுள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு இருக்கும். அதாவது கடவுள் இல்லை என்பதை சார்ந்தே அவருடைய கருத்துக்கள் அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும்.

அந்த திரைப்படத்தில் மட்டும் இல்லை, அவருடைய உண்மையான வாழ்க்கையிலும் கூட அதுவே நியதியாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

சமீபத்தில் கூட அவர் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் நான் நாத்திகத்தை ஏற்றுக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன். அதே போல ஆன்மிகத்தை ஏற்றுக் கொள்வதற்கு என்னை யாரும் கட்டாயப்படுத்த இயலாது என்று தெரிவித்தது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

சரி இதற்கும், திமுகவின் கூட்டணிக்கும்,kamal என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? அனைவரும் அறிந்தது தான். பல சமயங்களில் பல இடங்களில், அந்த கட்சியை சார்ந்த முக்கிய நபர்கள், குறிப்பாக அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடவுள் நம்பிக்கைக்கு எதிராகவே செயல்பட்டிருக்கிறார் என்பது பலரும் அறிந்த உண்மை தான். அது பல்வேறு சிக்கல்களையும், எதிர்விளைவுகளையும், ஸ்டாலினை சந்திக்க வைத்திருக்கிறது. ஆனாலும் அவர்களுடைய கடவுள் மறுப்புக் கொள்கை என்பது சற்றும் தளர்வதாக இல்லை. ஆனாலும் கூட தேர்தல் சமயத்தில் சில அரசியல் காரணங்களுக்காக அவர்களுடைய நிலைப்பாட்டிலிருந்து ஒரு சில மாற்றங்கள் தென்படும். அது மக்களை பெரிய அளவில் கவர்ந்து விடுவதாக நினைத்து விடுகிறார்கள்.

அதுமட்டுமல்ல அவருடைய கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகளும் கடவுள் மறுப்பு கொள்கையை பின்பற்றிவரும் கட்சிகளாக இருந்துவருகின்றன .அதற்குச் சான்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் என்று சொல்லலாம். ஆம் அவர் பல்வேறு இடங்களில், பல சூழ்நிலைகளில் கடவுள் மறுப்புக் கொள்கையை பகிரங்கமாகவே தெரிவித்திருக்கிறார். அவர் அவ்வாறு கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை என்று பொதுவாகவே தெரிவித்திருக்கலாம் .ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ள மக்களின் மனம் புண்படும் படியான சில பல கருத்துக்களை அவர் தெரிவித்திருப்பது எல்லோருக்கும் தெரியும். அதில் இந்துக்களின் தெய்வங்களின் சிலை பற்றி சில சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து கண்டனங்களுக்கு திருமாவளவன் ஆளானார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதோடு ஸ்டாலின் அவர்கள் இந்து மதச்சடங்குகளை அவமானப்படுத்தும் விதமாக பேசியதையும் யாரும் மறந்து விட முடியாது.

சமீபத்தில் தேவர் குரு ஜெயந்தி விழாவிற்குச் சென்ற ஸ்டாலின் அங்கே கொடுக்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல், தரையில் கொட்டி விட்டு வந்தது, மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. இது போக பல நேரங்களில் பல இடங்களில் அந்த விபூதி என்பது அவருக்கு பிரச்சினையாகவே வந்திருக்கிறது. ஒரு சில நேரங்களில் சில கூட்டங்களில் தவிர்க்க முடியாத காரணத்தால், விபூதியை அவர் பூசிக்கொள்ள நேர்ந்திருக்கிறது. ஆனாலும் அந்த விபூதியை அடுத்த நொடியே அகற்றி விடுவார். அவ்வாறு ஒரு வழிபாட்டு தலத்திற்கு சென்று அங்கே அவருக்கு இடப்பட்ட விபூதியை தன்னுடைய கையாலேயே அகற்றி அது ஒரு காணொளியாக வலைதளங்களில் பரவி மிகப் பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது என்பதை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

சரி இதற்கும் கமல்ஹாசனுக்கும் என்ன சம்பந்தம் என்பது இப்பொழுது வாசகர்களாகிய உங்களுக்கு புரிந்திருக்கும். ஆம் கடவுள் மறுப்புக் கொள்கை என்பதை நாசூக்காக ஆங்காங்கே அவருடைய திரைப்படத்தின் மூலமாகவே தெரிவித்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இதைத்தான் கடவுள் மறுப்பு கொள்கையை பின்பற்றி வரும் திமுக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது. ஆம் மக்கள் கூட்டம் என்பது கமல்ஹாசனுக்கு கூடுகின்றது, அவருக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது என்ற காரணத்திற்காக மட்டும் இந்த கூட்டணிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

அதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த கடவுள் மறுப்புக் கொள்கை தான். திமுக பெரியார் காலம்தொட்டு கடவுள் மறுப்பு கொள்கையை தன்னுடைய கொள்கையாகவே வைத்திருக்கிறது. என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த கடவுள் மறுப்புக் கொள்கை திமுகவிற்கு எந்த அளவிற்கு பலம் அளிக்கிறது என்றால், அவருடைய கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியாக இருந்தாலும் சரி மனிதநேய மக்கள் கட்சியாக இருந்தாலும் சரி ,அல்லது சிறிய கட்சிகளாக இருந்தாலும் சரி அநேக கட்சிகளிலும், இந்த இந்துமத கடவுள் மறுப்பு கொள்கையை என்பது ஆழமாக வேரூன்றியிருக்கிறது. அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கூட அந்த கடவுள் மறுப்புக் கொள்கையானது ஆணித்தனமாக தெரியவரும்.

சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக தெரிவித்துக்கொண்டு, சில சிறுபான்மையின கட்சியினருடன் கூட்டணி அமைத்திருக்கும் ஸ்டாலின் அவர்களை ஏமாற்றி அவர்களுடைய வாக்குகளைப் பெறுவதற்காகவே இதுபோன்ற தந்திரங்களை பயன்படுத்துகிறார் என்று சில சிறுபான்மையினரே தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆம் திமுகவைப் பொறுத்தவரையில், மக்கள் நலனை விட அதனுடைய அந்த கடவுள் மறுப்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்டே கூட்டணி அமைத்து இருப்பதாக சொல்கிறார்கள். மக்கள் மத்தியிலே இப்படி பேச்சுக்கள் அடிபட்டாலும் கூட அங்கே அந்த கூட்டணியில் இருக்கும் ஒருசில கட்சிகள் உள்ளே சென்று பார்த்தால், அது உண்மை என்றே படுகின்றது.

சமீபத்தில் கூட திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் அந்த கட்சியின் முக்கிய நபர் ஒருவர் இந்து மதம் ஒரு மதமே கிடையாது என்பது மாதிரியான கருத்தினை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் மேடையில் அமர்ந்திருந்த ஸ்டாலின் அதனைக் கேட்டு புன்னகை செய்தது அனைவரும் அறிந்ததே.

இப்படி கொள்கை ரீதியாக தன்னுடைய கட்சியை பலப்படுத்தி கொள்வதற்காகவே, அவருடைய கூட்டணியை விரிவுபடுத்தி இருக்கிறார் என்றும், பொது மக்களிடையே பரவலான கருத்துக்கள் உலா வருகின்றன.

சரி இந்த கடவுள் மறுப்புக் கொள்கை என்பதை தமிழகத்திலே திமுக மட்டும்தான் கடைபிடிக்கின்றதா வேறு எந்த கட்சிகள் இந்த கடவுள் மறுப்புக் கொள்கையை கடைபிடிக்க வில்லையா ?பார்ப்போம் வாருங்கள் . பெரியார் காலத்தில் தொடங்கப்பட்டு, பின்பு அவரால் வழிநடத்தப்பட்டு அவருக்கு பின்னால் கி. வீரமணி அவர்களால் தற்போது வழிநடத்தப்படும் திராவிடர் கழகம், ஆம் அங்கிருந்துதான் கடவுள் மறுப்புக் கொள்கை என்பது ஆரம்பமானது. பெரியார் என்பவர் பகுத்தறிவுவாதி என்பது அனைவருக்கும் தெரியும். அவர் கடவுள் பற்றற்றவர் என்று சொல்வதை விடவும், பகுத்தறிவுவாதி என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஆம் அவர் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர் என்று சொன்னாலும் கூட, அவர் தெரிவித்த சில பகுத்தறிவு சிந்தனைகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது என்பது உலகம் அறிந்ததே. மூடநம்பிக்கையில் இருந்து வெளிவர வேண்டும். பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். என்று ஒரு சில கருத்துக்களை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வண்ணம் அவர் தெரிவித்திருக்கின்றார்.

அதேசமயம் மக்களுடைய மனதை புண்படுத்தும் கருத்தை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அவர் தெரிவித்ததாக தெரியவில்லை. கடவுள் மறுப்புக் கொள்கை என்பது அனைவரும் அறிந்ததே. சில மூட நம்பிக்கைகள். பெண்களுக்கு எதிரான ஒரு சில விஷயங்களை கடுமையாகவே அவர் எதிர்த்து இருக்கின்றார். அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது ஆனால் ஒரு தரப்பினரின் மனதை புண்படுத்தி அவர் இதுவரையில் அரசியல் செய்ததில்லை என்று சொல்கிறார்கள்.

அவர் தொடங்கிய கட்சியை வைத்துக் கொண்டு இன்று கடவுள் மறுப்புக் கொள்கை என்று சொல்லிக்கொண்டு. ஒரு சிலர் மற்ற மதங்களின் நம்பிக்கை சார்ந்த மக்களுடைய மனதைப் புண்படுத்தும் விதமாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் .அதன் மூலம் அரசியல் ஆதாயம் கண்டு வருகிறார்கள் .என்று ஆதங்கம் தெரிவிக்கிறார்கள் சாமானிய மக்கள்.

சரி அதிமுக எதன் அடிப்படையில் இயங்குகிறது என்று பார்க்கலாம். பேரறிஞர் அண்ணாவிற்கு பிறகு அவர் தொடங்கிய திமுகவிலிருந்து பிரிந்து வெளியே வந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கட்சி தான் அதிமுக. அவர் அதிமுகவை தொடங்கிய ஒரு சில ஆண்டுகளிலேயே கோயில்களுக்கு சென்று வந்து இது கடவுள் மறுப்புக் கொள்கை இயக்கம் என்பதை அறவே மறுக்கும் விதமாகவே செயல்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள் அனுபவவாதிகள்.

அதோடு மட்டுமல்லாமல் அவர் காலத்திற்கு பிறகும்கூட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தின்போது, அனேக கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் தான்.

பாட்டாளி மக்கள் கட்சி இந்த வரிசையில் எடுத்துக்கொண்டால் தன்னுடைய ஆரம்ப காலத்திலிருந்தே அந்தக் கட்சி கடவுள் நம்பிக்கையுடன் தான் செயல்பட்டு வந்திருக்கிறது என்று ஒரு சில குறிப்புகள் மூலம் தெரிய வரும். வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு இருந்த நேரத்தில் அவர் தெரிவித்த ஒரு சில கருத்துகளிலேயே அந்த கொள்கையானது எதிரொலித்து இருக்கும்.

அதை அனைவரும் அறிந்தே வைத்திருப்பார்கள் அதை பற்றி நாம் பெரிதாக விவாதிக்க அவசியமில்லை என்று தோன்றுகிறது.

பாஜகவை எடுத்துக்கொண்டால், அந்த கட்சியை பற்றி பேச வேண்டுமென்றால், ஆன்மீகத்தை குறிப்பிடாமல் பேசவே முடியாது. ஏனென்றால் அந்தக் கட்சியின் அடிப்படை கொள்கையே இந்துத்துவம் என்பது தான். ஆம் இந்துத்துவம் என்பதை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் பேசிய ஒரு சில கருத்துக்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்ததே ஒழிய எந்த மதத்தினரையும் புண்படுத்தும் விதமாக அவர்கள் பேசவில்லை என்று சொல்கிறார்கள். தீவிரவாதம் என்ற சக்திக்கு எதிராக பல்வேறு இடங்களில் பல்வேறு சமயங்களில் அந்த கட்சி செயல்பட்டிருக்கிறது. அதற்கு ஆதிகாலம் தொட்டே ஆதாரங்களும் இருந்து வருகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்த போதும் சரி ,அதிலிருந்து பார்த்தோமானால் இப்பொழுது நரேந்திர மோடி பிரதமராக இருக்கும்போதும் சரி, தீவிரவாதம் என்ற உலக விரோத சக்திக்கு எதிராக ஒரு மிகத் தீவிரமான நடவடிக்கை முன்னெடுக்கும் ஒரு கட்சியாக பாஜக இருந்து வருகிறது. அதேசமயம் இந்துகளின் மத நம்பிக்கைகளையும் அவருடைய பாதுகாப்பையும் உறுதி செய்ய நினைக்கும் அந்தக் கட்சியானது சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கும் பல விதங்களில் பல இடங்களில் பாதுகாப்பு அளிக்கும் விதமாக தான் செயல்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.

அதேபோல இந்து கடவுள்களை பற்றி சமீபத்தில் மிக தவறாக சித்தரித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அவர்கள். நாடாளுமன்றத்திற்கு போகவே இயலாத நிலையில் இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். காரணம் அங்கே பாஜக மிக பலத்துடன் இருக்கின்றது என்பதுதான். அவர்கள் எந்த விதத்திலும், யாருடைய நம்பிக்கையும் சிதைப்பதற்கு தயாராக இல்லை என்று தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதேசமயம் தேசத்திற்கு எதிரான சக்திகளை எதிர்கொண்டு அவற்றை முறியடிப்பதில் வல்லமை பெற்றிருக்கிறது அந்த கட்சி என்றும் தெரிவிக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில், திமுக அமைத்திருக்கும் கூட்டணி ஆனது மக்கள் நலனை சாராமல் தன்னுடைய கடவுள் மறுப்புக்கொள்கையை சார்ந்தது தான். என்று பொது மக்களிடையே பரவலான கருத்துக்கள் இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் இந்த இரு கட்சிகளின் கூட்டணி அமைந்தால் அது தமிழக அரசியலில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous articleமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் கேப்டன் கங்குலி! என்ன நடந்தது?
Next articleஇந்த ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது அறிவிப்பு