இலங்கையிடம் சிக்கியிருக்கும் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்பது இந்திய மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனாலும் இது தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து பலமுறை ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் இந்திய மீனவர்களின் எண்ணங்களை வேடிக்கை பார்த்ததே தவிர அதனை போக்குவதற்கு எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஆனால் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக கட்சி தேவை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் தற்சமயம் மத்தியில் ஆட்சியில் இருந்து வருகிறது. இருந்தாலும் கூட இந்த கச்சத்தீவை மீட்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
இந்தநிலையில், அரியலூருக்கு வருகை தந்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் போற்றக்கூடிய சாதனைகள் எதுவுமில்லை இன்னும் செய்யவேண்டியது அநேகம் இருக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு இருந்து வருகிறது.
அதனை யாரும் மறுக்க இயலாது. நியாயவிலைக் கடைகளில் அரிசி கடத்தலில் தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு அதிகளவு கடத்தப்படுகிறது. இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பாலியல் வன்கொடுமை செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு கேள்விக்குறியாகியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றன.
மத்திய, மாநில, அரசுகள் வெறும் அறிவிப்பு அரசாகவே இருக்கிறது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் இலவசங்கள் தொடர்ந்து கொண்டிருந்தால் இலங்கையை போல நிலை ஏற்பட்டு விடும் அபாயம் வருவதற்கான வாய்ப்புள்ளது.
மத்திய அரசு கச்சதீவை மீட்டெடுப்பதற்கு இதுவே சிறந்த தருணம். அதனை செய்து தமிழக மீனவர்கள் நலனை காக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.