உலகிலேயே காஸ்ட்லியான பத்திரிக்கை இதுதான்!! தங்கம் மற்றும் வெள்ளியில் இன்விடேஷன்!!

Photo of author

By Jeevitha

India: இந்தியாவின் கண்ணாடி நகரமான  ஃபிரோசாபாத் நகரில் முதல் முறையாக தங்கம் மற்றும் வெள்ளியால் திருமண அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் விலை ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.11 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்யாணம் என்பது நம் நாட்டில் வெகு சிறப்பாக நடைபெறும் ஒரு நிகழ்வாகும். இதில் இரு மனங்கள் ஒன்று சேர்ந்து அனைவராலும் நடத்த பெரும் நிகழ்வே திருமணம் ஆகும். திருமணத்தின் தொடக்கப் புள்ளியாக இருப்பது அதற்காக அச்சிடப்படும் அழைப்பிதழ் தான். கொண்டாட்டங்களுக்கான மன நிலையை உருவாக்குவதில் திருமண அழைப்பிதழ்கள் முக்கியமானவை.

இதை கருத்தில் கொண்டு ஃபிரோசாபாத் நகரில் முதல் முறையாக தங்கம் மற்றும் வெள்ளியால் திருமண அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வடிவமைப்புகளை கொண்டது என தெரிவித்துள்ளார் ஜிண்டால். இந்த திருமண அட்டைகள் விலை ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.11 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜிண்டால் நாங்கள் பல்வேறு வடிவமைப்புகளுக்கான கோரிக்கைகளை தொடர்ந்து வருகிறோம், மேலும் இந்த ஆடம்பர அட்டைகளுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ளார். அது மட்டும் அல்லாமல் மக்கள் தங்கள் விரும்பும் அழைப்பிதழ் அட்டையை உருவாக்க தங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. ஒரு ஒரு திருமண அட்டையும் தூய தங்கம் மற்றும் வெள்ளியில் இருந்து மிக துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது முழுவதுமான தங்கம் என தெரிந்து கொள்ள இயந்திரங்கள் மூலம் தர சோதனைகள் செய்யப்பட்டு காட்டும் என அறிவித்துள்ளார். இந்த மாதம் திருமண சீசன் நெருங்கி வருவதால், ஏற்கனவே நாங்கள் ஆர்டர்களை பெற ஆரம்பித்து விட்டோம் என லாலா ரவீந்திரநாத் கன்ஹையா லால் சரஃபா கடை நிறுவனர் கூறியுள்ளார்.