எடப்பாடியில் நிறுத்தப்படும் திமுக வேட்பாளர் இவர் தான்.. புது முகத்தை மாற்றிய திமுக தலைமை!!

0
319
This is the DMK candidate who will be stopped in Edappadi.. The new face of the DMK leader!!
This is the DMK candidate who will be stopped in Edappadi.. The new face of the DMK leader!!

ADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவும், திமுகவும் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதை பற்றியும், மக்களை  சந்திக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அதிமுகவின் கோட்டையாக அறியப்படும் சேலத்தில் வெற்றி பெற வேண்டுமென திமுக பல வருடங்களாக முயற்சித்து வருகிறது.

ஆனால் அது ஈடேரிய பாடில்லை. அவர்களின் பகல் கனவு பலிக்காது என்ற நம்பிக்கையில் அதிமுகவும் அதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் அவர் யாருடனும்  கூட்டணி வைக்காமல் தனித்து நின்று போட்டியிட்டாலும் அவர் தான்  வெற்றி பெறுவார். இந்த சூழலில் சட்டமன்ற  தேர்தலில், திமுக எப்போதும்  எடப்பாடி  தொகுதியில் அதிக கவனம் செலுத்தும்.

2026 தேர்தலில் எடப்பாடி தொகுதியில் திமுக சார்பாக இபிஎஸ்க்கு எதிராக யாரை நிறுத்தலாம் என்று  ஸ்டாலின் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். இதற்கான இறுதி முடிவு இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், கடந்த முறை எடப்பாடி தொகுதியில் சம்பத்குமார் என்ற புதிய முகத்தை நிறுத்தி தோல்வியை சந்தித்தது போல இந்த முறையும் நிகழ கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது.

அதனால் இந்த முறை மக்களால்  நன்கு அறியப்பட்டு வரும் முகமாக இருப்பவர்களை தான்  அங்கு நிறுத்த வேண்டும் என்பதில் திமுக தெளிவாக உள்ளது. அந்த வகையில் பார்த்தால் சேலம் முன்னாள் எம்.பி. பார்த்திபன் மற்றும் தற்போதைய சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சுற்றுலா துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் இவர்களில் ஒருவர் தான்  இதற்கு சரியாக இருப்பார்கள் என்று திமுக தலைமை நம்புகிறது.

Previous articleசிபிஐ விசாரணை விஜய்யின் இமேஜை காப்பாற்றுவதற்காக தான்.. மக்களுக்காக அல்ல.. உமாபதி விளக்கம்!!
Next articleமதுரை மேற்கு தொகுதியில் காலூன்றும் திமுக.. இலவச பொருட்கள் மூலம் மக்களை ஈர்க்கும் பணியில் மும்முரம்!!