மத்திய அரசின் குறிக்கோள் இதுதான்! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்!

Photo of author

By Sakthi

தற்போது இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பாஜக பல மாநிலங்களில் தன்னுடைய அதிகாரத்தை நிலை நிறுத்தி வருகிறது.

அந்த விதத்தில் பாஜக காங்கிரஸ் கட்சியை இந்தியாவில் இருந்து முற்றிலுமாக அகற்ற வேண்டும் என முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.பாஜக என்பது எப்போதுமே நாட்டுப்பற்று மிக்க ஒரு கட்சி என சொல்லப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், வடகிழக்கு மாநிலமாக இருந்து வரும் அருணாச்சலப் பிரதேசத்தில் முதலமைச்சர் பெமா காண்டு தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றியதாவது வடகிழக்கு மாநிலங்களில் ஊழல் கலாச்சாரத்தை ஒழித்து அரசு உதவிகளை கடைகோடி பொது மக்களுக்கும் கிடைக்கச் செய்த பெருமை பாஜக அரசுக்கு இருக்கிறது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அரசு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இடைத்தரகர்கள் சுருட்டி சென்றார்கள் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முடிவு கட்டியது பாரதிய ஜனதா கட்சி தான் என தெரிவித்ததோடு மாநில மேம்பாட்டு நிதியில் ஒவ்வொரு காசும் கடைசி மனிதனுக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி என்றும் 50 ஆண்டு காலமாக நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு வடகிழக்கு மாநிலங்களில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் இத்தாலி கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு இந்திய கண்ணாடி அணிந்தால் 50 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் காணாத வளர்ச்சியை தற்போது வடகிழக்கு மாநிலங்கள் பெற்றிருக்கிறது என்பது அவர்களின் கண்களுக்கு தெரியும் என தெரிவித்து இருக்கிறார்.

முந்தைய காங்கிரஸ் அரசின் தவறான கொள்கைகள் காரணமாக, வட கிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியிருந்தது.

கடந்த 8 வருட காலங்களில் சமரச ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதோடு கிளர்ச்சியாளர்கள் 9600 பேர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர் என தெரிவித்திருக்கிறார்.

இங்குள்ள இளைஞர்கள் துப்பாக்கி கலாச்சாரத்தை கைவிட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆரம்பிக்குமளவிற்கு முன்னேறியிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. எல்லா பிரச்சினைகளுக்கும் சமரச தீர்வு காணப்பட்டிருக்கிறது.

3 முக்கிய இலக்கு களை அடிப்படையாக கொண்டு வடகிழக்கு மாநிலங்களை முன்னேற்ற நாங்கள் பாடுபட்டு வருகிறோம் என தெரிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

முதலில் இந்த பிராந்தியத்தின் பழமையான மொழி கலாச்சாரம், நடனம், இசை, போன்றவற்றை அறியாமல் காப்பதுடன் அவற்றை இந்த நாட்டின் பெருமைமிகு அடையாளங்களாக மாற்றவேண்டும்.

அடுத்ததாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கொண்டுவரப்பட்டு இந்த பிராந்திய இளைஞர்களை சர்வதேச அளவில் போட்டி போடும் அளவிற்கு முன்னேற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

மூன்றாவதாக நாட்டில் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் வடகிழக்கு மாநிலங்களை முன்னணியில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதே மத்திய அரசின் கொள்கையாக இருக்கிறது என அவர் இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.