தளபதி 66 திரைப்படத்தின் கதாநாயகி இவர்தான்! வெளியான தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி!

Photo of author

By Sakthi

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய் அவருடைய நடிப்பில் அவருடைய 65வது திரைப்படம் தயாராகி வருகின்றது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த திரைப்படத்தின் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயார் செய்யும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். என்று சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது நோய் தொற்று பரவல் குறைந்த பின்னர் இந்த திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கிடையில் நடிகர் விஜய்யின் 66வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அத்துடன் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படம் இரண்டு கதாநாயகிகளை கொண்டதாக இருக்கும் என்றும், அதில் ஒரு கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் அவர்களை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், தகவல் கிடைத்திருக்கிறது. இதற்கு முன்னரே விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து பைரவா மற்றும் சர்க்கார் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.