அடுத்த தளபதி இவர்தான்! தி கோட் திரைப்படத்தில் சூட்ச்சகமாக வைக்கப்பட்ட கிளைமாக்ஸ் சீன் !

இந்த வருடம்  செப்டம்பர் 5ஆம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில்  வெளியாகிய திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சீனீல் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் தான்  சிவகார்த்திகேயன். அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த காட்சிகள் தான் தற்போது சமூக வலைதள பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது .

அந்த  சீனில்  நடிகர் விஜய், சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கி கொடுத்து இதை பத்திரமாக பார்த்துகொள்ளும் மறு கூறியிருப்பார். அதற்கு பதிலாக   சிவகார்த்திகேயன் விஜயிடம் நீங்கள் இதை விட பெரிய வேலைக்கு செல்கிறிர்கள் என்பதால் துப்பாக்கியை நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறியிருப்பார்.

இந்த உரையாடல் நடிகர் விஜய் அவர்கள் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்லப் போவதவும், அதனால் சினிமாவில் அடுத்து நீங்கள் தான் என் இடத்தில்  இருப்பீர்கள் என்பதை கூறிப்பதை போல அமைந்தள்ளது. இது பேசு பொருளாக மாறியுள்ளது.  நடிகர் சிவகார்த்திகேயன் கோட் படத்திற்கு நடித்ததற்காக விஜய் அவர்கள் வாச்ட் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த அமரன் திரைப்பட விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர் ஒருவர், கோட் படத்தில்  நடித்ததற்காக விஜய் அவர்கள் வழங்கிய துப்பாக்கி பெரியதா  இல்லை வாச்ட் பெரியதா  என்று கேள்வி எழுப்பினார். அதற்கு  சிவகார்த்திகேயன் “தளபதி கொடுத்த அன்பு தான் ஸ்பெஷல்” என்று பதில் கூறினார். இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய படம் “பிரின்ஸ்” வெளியாகியது.

இந்த படம் மோசமான விமர்சனங்காளை பெற்றது. இதனால் இனி சிவகார்த்திகேயன் காலி என்று விமர்சனங்கள் எழுந்தது, அப்போது என்னுடைய நெருங்கிய நண்பர் என்னிடம் வந்து திரைப்படம் சரியாக இல்லை என்று விமர்சனங்கள் வந்தால் அதிலுள்ள அர்த்தத்தை பார்க்க வேண்டும் என்றார். படம் நல்லா  வரவில்லை என்றால் படத்தை சரியாக கொடுக்க வேண்டும் என்று அர்த்தம் என நான் புரிந்துகொண்டதாக கூறினார்.

நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர்  ரஜினி காந்திற்கு மகனாக வரும் கதாபத்திரத்திரதிற்கு  முதலில் தேர்வு செய்யப்பட்டவர்  சிவகார்த்திகேயன் தான் ஆனால் அதற்கு ரஜினி தனக்கு மகனாக நடித்தால் அடுத்த சூப்பர் ஸ்டார்  இவர் தான் என்று ஆகிவிடும் என்பதால் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.