எங்களது அரசியலில் இது மட்டுமே நிறைந்து இருக்கிறது! முதல்வருக்கு தர்மசங்கடமாக சொன்ன விஷயம்!
பல பேர் பல பதவிகளில் இருந்தாலும், அந்தந்தத் துறையில் நடக்கும் அநீதிகளை யாரும் வெளியில் சொல்வதில்லை. எப்படி இருந்தாலும் அட்ஜஸ் பண்ணிக் கொண்டு அதாவது சகித்துக் கொண்டு சென்று விடுவார்கள். சரி பண்ணிக்கொள்ளலாம் என்ற மனநிலையே எல்லோரிடமும் நிறைந்து இருக்கிறது.
அப்படி இருக்கும்போது தற்போது, பீகார் மாநிலத்தின் சமூக நலத் துறை மந்திரியாக இருக்கும் மதன் சாஹ்னி இத்தகைய குற்றச்சாட்டை சொந்த அரசின் மீது மந்திரிசபையிலேயே கூறியுள்ளார். முதல் மந்திரி நிதிஷ் குமாரின் மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள மந்திரி இப்படிக் கூறியிருப்பது, அவருக்கு சிறிது தர்மசங்கடம் தான் என்றாலும் தைரியமாக வெளிப்படையாக கூறியுள்ளார்.
மேலும் அவர் தன் தொகுதியில் பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை. அதிகாரிகளின் துறை மந்திரியின் பேச்சை கூட கேட்பதில்லை. இது மாநில அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளார். தனது துறையில், பல அதிகாரிகள் தனது ஒப்புதல் கிடைத்த பிறகும் கூட, அதை கிடப்பில் போட்டுள்ளனர்.
இத்தகைய அதீத துணிச்சல் அவர்களுக்கு எப்படி கிடைக்கும். அப்போது நான் எதற்காக பதவியில் இருக்க வேண்டும். கிடைக்கும் ஒரு சில சலுகைகளை பெற்றுக் கொள்வதற்காக மட்டும் நானும் மந்திரி என்று கூற வேண்டுமா? எனக்கு அப்படி கூற எந்த அவசியமும் இல்லை என்றும் கூறியுள்ளார். முதல் மந்திரியிடம் இதுபற்றி கூறினீர்களா? என்று கேட்ட கேள்விக்கு நான் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்.
நான் அவரை மிரட்டுவதாக கூட அவர் நினைத்து விடலாம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் முதன்மைச் செயலாளர் தனது பேச்சை கேட்பது இல்லை எனவும், சனிக்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை தருவதாகவும், தற்போது அதை தயார் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.