TVK: அடுத்த 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கும் சமயத்தில், தமிழக அரசியலை ஆட்டம் காண வைக்கும் வகையில் பிரபல நடிகரான விஜய் கட்சி தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்னும் இக்கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போகிறது. இந்த செய்தி வெளியானதிலிருந்தே தவெக பற்றிய பேச்சு தான் அனைத்து ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருகிறது.
விஜய் தனது முதல் மாநாட்டிலேயே கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று அறிவித்தாலும் கூட இது நாள் வரை தவெக உடன் எந்த கூட்டணியும் உறுதியாகவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில், இப்போது தான் முக்கிய முகங்களும், அரசியல் அனுபவம் வாய்ந்த நபர்களும் தவெகவில் இணைய தொடங்கியுள்ளனர். விஜய்க்கு ஆதரவு அதிகளவில் இருந்தாலும் அவருக்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற கருத்து மேலோங்கி இருந்தது. இதனால் இந்த ஆதரவு அத்தனையும் ஓட்டாக மாறுமா என்பது சந்தேகமாவே உள்ளது.
இதன் காரணமாக விஜய் தேர்தல் முடிவில், பூஜ்ஜியமாக்கப்படுவார் இல்லையென்றால், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று நிலை நிறுத்தப்படுவார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால் விஜய்யின் இலக்கு முதல் தேர்தலிலேயே ஆட்சியில் அமர்வது தான். ஆனால் இதற்கான ஏற்பாடுகள் எதுவும் தவெக சார்பில் தீவிரமாக நடைபெறுவதாக தெரியவில்லை. இப்படி இருக்கும் சூழலில் காங்கிரஸ் மற்றும் விசிக உடன் தவெக கூட்டணி அமைத்தால் மட்டுமே விஜய்யால் வெற்றி பெற முடியும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.