மல்லை சத்யா இணைய போகும் கட்சி இது தான்.. வெளியான தகவல்!! ஷாக்கில் வைகோ!!

0
144
This is the party that Mallai Sathya is going to join.. Information released!! Vaiko in shock!!
This is the party that Mallai Sathya is going to join.. Information released!! Vaiko in shock!!

DMK DVK MDMK: அடுத்த வருடம் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழக கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதற்காக தங்களது கூட்டணியை பலப்படுத்த கட்சிகளனைத்தும் முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிமுகவும், திமுகவும் தான். ஆனால் அதில் புதிய திருப்பமாக தோன்றியது தான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இவரின் வருகை அனைத்து கட்சிகளுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.

இந்த கணிப்பு கிட்ட தட்ட உறுதியாவது போலுள்ளது என்றே சொல்லலாம். விஜய்யின் அரசியல் வருகையிலிருந்தே மீள முடியாமல் தவிக்கும் அரசியல் களம், தற்போது மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவின் புதிய கட்சியை நோக்கி திரும்பியுள்ளது. திராவிட வெற்றிக் கழகம் என்னும் தனது கட்சி பெயரை இன்று அறிவித்த மல்லை சத்யா, அடுத்த கட்டமாக எந்த கட்சியுடன் கூட்டணி சேரப் போகிறார் என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

இது குறித்து விவாதம் எழுந்த போது, அவர் திமுகவில் இணைய போவதாக தங்கள் வந்துள்ளது. மதிமுக பல வருடங்களாக திமுக கூட்டணியில் பயணித்து வரும் நிலையில், மதிமுகவிலிருந்து பிரிந்தாலும் திமுக கூட்டணியில் தான் தொடருவோம் என்பதை இவரது முடிவு உறுதிப்படுத்தியிருக்கிறது என்று பலரும் கூறுகின்றனர். இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், மல்லை சத்யா திமுக உடன் தான் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி வைகோவிற்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.

Previous articleதிமுக-அதிமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய பிரேமலதா.. இவ்வளவு தைரியம் இவரால தானா!!
Next articleஓபிஎஸ் போட்டியிட போகும் தொகுதி இதுவா.. காங்கிரஸுக்கு ஆப்பு வைக்க போகும் முடிவு!!