விவோ ஸ்மார்ட்போன் வாங்க இதுதான் சரியான நேரம்!!! ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்த விவோ நிறுவனம்!!!
பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. அதன்படி விவோ நிறுவனம் Y36 மற்றும் Y02t மாடல் ஸ்மார்ட் போன்களுக்கான விலையை அதிரடியாக குறைத்துள்ளது.
விவோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Y36 மாடல் ஸ்மார்ட்போனுக்கு 1000 ரூபாய் குறைத்துள்ளது. அதே போல Y02t மாடல் ஸ்மார்ட்போனுக்கு 500 ரூபாய் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய சந்தையில் விவோ Y36 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம் என்ற ஒரே ஒரு வேரியன்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. விவோ நிறுவனம் Y36 ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்த பொழுது அதன் விலை 16999 ரூபாயாக இருந்தது. இதையடுத்து தற்பொழுது விவோ நிறுவனம் Y36 ஸ்மார்ட்போனுக்கு 1000 ரூபாய் குறைத்ததில் இருந்து Y36 ஸ்மார்ட்போன் விலை 15999 ரூபாயாக மாறியுள்ளது.
அது மட்டுமில்லாமல் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் கார்ட், பெடரல் வங்கி, யெஸ் பேங்க், எஸ்.பி.ஐ கார்டு, இண்டஸ்இண்ட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் உள்ள வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தும் பொழுது 1000 ரூபாய் கேஷ் பேக் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வி புரொடக்சன் சலுகைகளும் வழங்கப்படுகின்றது.
விவோ Y02t ஸ்மார்ட் போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ரோம் என்ற வேரியண்டில் கிடைக்கின்றது. இதன் அறிமுக விலை 9999 ரூபாயாக இருந்தது. தற்பொழுது விவோ Y02t ஸ்மார்ட் போனுக்கு 500 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் 9499 ரூபாயாக உள்ளது. இந்த மாடலை வாங்குபவர்களுக்கு வங்கி சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. இரு மாடல்களின் விலையும் பிளிப்கார்ட், விவோ இ-ஸ்டோர், சில்லறை விற்பனூ நிலையங்களிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.