ADMK:மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்படும் அதிமுக அதன் முன்னாள் தலைவர்கள் இல்லாமல் வலுவிழந்து காணப்படுகிறது. அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்திய போது ஏற்படாத பிரிவினைகள், இபிஎஸ் தலைமையில் அரங்கேறி வருகிறது. தலைமைக்கு எதிராக செயல்படுபவர்களை கூட ஜெயலலிதா அரவணைத்து சென்றார். இபிஎஸ் அதற்கு எதிர்மாறான வேலைபாடுகளை செய்து வருகிறார். கட்சியின் மூத்த தலைவர்களாகவும், ஜெயலலிதாவிற்கு மிக நெருக்கமானவர்களையும் கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் இபிஎஸ் நீக்கியது அனைவரும் அறிந்த ஒன்று.
இதனால் அவர்கள் தொண்டர்களின் வாக்கு அதிமுகவிற்கு சட்டமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டது. அதிலும் முக்கியமாக, செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது கொங்கு மண்டலத்தில் அதிமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கொங்கு மண்டலம் முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ஈரோட்டில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்துமென்று மதிப்பிடப்படுகிறது. முக்கிய தலைவர்களை நீக்கிவிட்டாலும் விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்து விட்டால் பிரிந்து சென்றவர்களின் வாக்கு வங்கியை விஜய் மூலம் சரிகட்டி விடலாமென்று இபிஎஸ் நினைத்த சமயத்தில் விஜய் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், தற்போது அதிமுக, பாஜக உடன் மட்டுமே கூட்டணி அமைத்திற்கும் நிலையில், இந்த கூட்டணி தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்பு இல்லையென்று, கருத்து கணிப்பு கூறுகிறது. இந்த கூட்டணியால், ஜஸ்ட் பாஸ் மட்டுமே ஆக முடியும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. தவெக தலைமையிலான கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து, விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால், அதிமுக இந்த தேர்தலில் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

