இந்த உலகில் மனிதன் செய்யும் நன்மைகள் மற்றும் தீமைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு சொர்க்கமா? அல்லது நரகமா? என்று முடிவு செய்வார்கள். இவ்வாறு முடிவு செய்ததன் அடிப்படையில் ஒருவர் இறந்த பிறகு, அவர்களுக்கான இடம் எது என்பதை கருட புராணம் கூறுகிறது. அதாவது ஒருவர் நன்மைகள் அதிகம் செய்திருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடமும், தீமைகள் மற்றும் பாவங்களை அதிகம் செய்தவர்களுக்கு நரகத்தில் இடமும் ஒதுக்கப்படும்.
பாவங்களை அதிகம் செய்து நரகத்திற்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் எந்த விதமான தண்டனைகள் வழங்கப்படும் என்பதையும் கருட புராணம் கூறியுள்ளது. அதாவது ஒவ்வொரு விதமான பாவத்திற்கும் ஒவ்வொரு விதமான தண்டனைகள் நரகத்தில் வழங்கப்படும். அது என்ன தண்டனைகள் என்பது குறித்து தான் இந்த பதிவில் காணப் போகிறோம்.
பொதுவாக கருட புராணம் என்பது ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய ஆன்மாவின் பயணம், நரகத்தில் கிடைக்கும் தண்டனைகள் மற்றும் பாவங்களை பற்றி பேசும் முக்கியமான புராணங்களுள் ஒன்றாகும்.
1. ஒரு பிராமணரை, தாய், தந்தையை அல்லது குருவை கொள்வது மிகப்பெரிய பாவமாகும். இதற்குரிய தண்டனையாக அந்த ஆன்மா மகாராவுருவ நரகத்திற்கு அனுப்பப்படும். அந்த நரகத்தில் இருக்கும் கொடிய மிருகங்கள் மற்றும் பாம்புகள் அந்த ஆன்மாவை கடிக்கும்.
2. பசுக்கள், முனிவர்கள் மற்றும் அப்பாவி உயிரினங்களை கொன்றால் அந்த ஆன்மா கும்பி பாக நரகத்திற்கு அனுப்பப்படும். அந்த நரகத்தில் கொதிக்கும் எண்ணெயில் ஆன்மாவை கொதிக்க விடுவார்கள்.
3. தவறான தகவல்களை பரப்புதல், ஏமாற்றுதல், நீதிமன்றத்தில் பொய் கூறுதல் போன்ற தவறுகள் செய்த ஆன்மா ராவுருவ நரகத்திற்கு அனுப்பப்படும். அங்கு விஷ பாம்புகள் மற்றும் தீண்டிகளால் கடிக்கப்படும்.
4. திருமணம் ஆனவர்கள் பிறருடன் உறவு கொண்டால் அந்த ஆன்மா வஜ்ர கண்டக நரகத்திற்கு அனுப்பப்படும். அங்கு கூர்மையான முள் அவர்களை குத்திக் கொண்டே இருக்கும்.
5. படம் பொருள் மற்றும் பிறரது சொத்துக்களை திருடினால் அந்த ஆன்மா தமிஸ்ரா நரகத்திற்கு அனுப்பப்படும். அந்த நரகத்தில் அந்த ஆன்மாவை தீவிரமான இருட்டில் அடைத்து, குத்தியும் அடித்தும் தண்டிக்கப்படும்.
6. தாய், தந்தை, ஆசான் மற்றும் பெரியவர்களை மதிக்காமல் இருந்தால் அந்த ஆன்மா அசிபத்ரன் நரகத்திற்கு அனுப்பப்படும். அங்கு உலோகத்தால் ஆன கூர்மையான கத்திகள் அந்த ஆன்மாவை வெட்டிக் கொண்டே இருக்கும்.
7. நிறைய பணம் மற்றும் வளங்களை வைத்திருந்தும் மற்றவர்களுக்கு உதவாமல் இருந்தால் அந்த ஆன்மா புயோத நரகத்திற்கு அனுப்பப்படும். அங்கு அந்த ஆன்மா அழுக்கான மற்றும் பாலான நீரில் மூழ்கி விடும்.
8. அதிகமாக மது அருந்துவது, தடை செய்யப்பட்ட உணவுகளை உண்பது போன்ற குற்றங்களை செய்தால் அந்த ஆன்மா அலாபட்ச நரகத்திற்கு அனுப்பப்படும். அங்கு அந்த ஆன்மாவிற்கு குடிக்க உருக்கிய இரும்பை தருவர்.
9. தன்னுடைய கடமைகளை தவிர்த்தல், தர்மத்திற்கு புறம்பாக நடப்பது போன்ற குற்றங்களை செய்தால் அந்த ஆன்மா கிருமி போஜன நரகத்திற்கு அனுப்பப்படும். அங்கு அந்த ஆன்மாவை புழுக்கள் மற்றும் கிருமிகள் தின்றுவிடும்.
10. பிறரைப் பற்றி பொய் பரப்புதல், அவமானப்படுத்துதல் போன்ற தவறுகளை செய்தால் அந்த ஆன்மாவின் நாக்கு தொடர்ந்து அறுக்கப்படும்.
11. பெண்களை தவறாக நடத்துதல், அவர்களை வன்புணர்வு செய்தல் போன்ற குற்றங்களுக்கு அந்த ஆன்மா நரகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு இருக்கும் பெரிய இரும்பு கொம்புகளில் முட்டும் வரை தொங்கவிடப்படும்.
12. கோவில்களை சேதப்படுத்துதல், சிலைகளை உடைத்தல் போன்ற தவறுகளை செய்தால் அந்த ஆன்மா மகா பிரபு நரகத்திற்கு அனுப்பப்பட்ட தொடர்ந்து தீயில் சுடப்படும்.
இந்த பாவங்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால் பகவான் விஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு, தர்மத்தின் படி வாழ்ந்து வந்தால் சற்று தப்பிக்கலாம். இனிமேல் இந்த தவறுகளை செய்யாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இவ்வாறு செய்தால் அந்த ஆன்மா நரகத்திலிருந்து மீண்டும் வைகுண்டம் அனுப்பப்படும் என்று கருட புராணம் கூறுகிறது.