தமிழ்நாட்டில் அரசு துறைகளில் இருக்கின்ற பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வுகள் நடத்தி தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதோடு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 2 மற்றும் 2A உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகின்றது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்து அவர்களுக்கு போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறது.
சென்ற இரண்டு வருடகாலமாக நோய் தொற்று பரவல் காரணமாக, போட்டித்தேர்வுகள் நடைபெறவில்லை இதன் காரணமாக, இந்த வருடத்திற்கான போட்டித் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருக்கிறது.
அனைத்து போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தகுதி தாளில் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது, இதனை தொடர்ந்து தமிழ் மொழியில் தொகுதிகளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே மற்ற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் தற்சமயம் புதிய வகை நோய் தொற்று காரணமாக, மறுபடியும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் போட்டித்தேர்வுகள் கட்டாயமாக நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்திருக்கிறது.
தற்சமயம் அரசு பணிகளுக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது, இது தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தெரிவிக்கும்போது, அனைத்து வகையான மாநில அரசுப் பணிகளுக்கும் இனி டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்யும் விதத்தில் மசோதா அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதனடிப்படையில் ஆவின், மின்வாரியம், போக்குவரத்து துறை, உள்ளிட்ட அமைப்புகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.