TVK: பிரபல நடிகரான விஜய், திடீரென அரசியலில் குதித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவரின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்ததிலிருந்தே அனைத்து ஊடகங்களிலும் விஜய்யின் தவெக பற்றிய செய்தி தான் தலைப்பு செய்தியாக உள்ளது. இவர் கட்சி தொடங்கியவுடன் இவருக்கு இருந்த ரசிகர்கள் அனைவரும் தொண்டர்களாக மாறிவிட்டனர். ஆனால் கரூர் சம்பவம் விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.
விஜய் இன்னும் எத்தனை வருடங்கள் அரசியலில் இருந்தாலும் கரூர் சம்பவம் அவரது அரசியல் வாழ்க்கையில் அளிக்க முடியாத கருப்பு தினமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு இருந்த நிலையில் கூட மக்களின் கோபம் திமுக அரசு மீது தான் திரும்பியது. மாறாக விஜய் மீது அனுதாபம் தான் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விஜய்யுடன் எந்த கட்சி கூட்டணி சேரும் என்பது தற்போது வரை பேசுபொருளாக உள்ளது. விஜய்க்கு மிகவும் நெருக்கமான கட்சியாக காங்கிரஸ் இருப்பதால் தவெக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு பெறுவதற்காக மட்டுமே காங்கிரஸ் விஜய்யை பயன்படுத்தி வந்தது. விஜய் திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால் அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று யூகிக்கப்பட்டது. விஜய் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி போன்றவற்றை அதிமுக ஏற்காததால் விஜய் இதனையும் மறுத்துவிட்டார். இவ்வாறு தவெகவின் கூட்டணி கிடப்பிலேயே உள்ள நிலையில், இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் மணி, விஜய் இந்த தேர்தலில் தனித்து போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது என்று கூறியுள்ளார்.
இதற்கு உதாரணமாக, விஜய் தனது முதல் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவித்ததோடு சரி. அதன் பிறகு எந்த இடத்திலும் அதை பற்றி பேசவில்லை. ஈரோடு மக்கள் சந்திப்பில் கூட இன்னும் சில அமைச்சர்கள் இணைய இருக்கிறார்கள் என்று மட்டும் தான் கூறினார். கூட்டணி குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் விஜய் இந்த தேர்தலில் தன்னுடைய பலத்தை உணர தனித்து போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கணிக்கப்படுகிறது.