DMK TVK: 2021 தேர்தலில் கோட்டை விட்ட அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனவும், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக இந்த முறையும் ஆட்சி கட்டிலை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமென பல்வேறு திட்டங்களை கையிலெடுத்து வருகிறது. அந்த வகையில், நான்கரை ஆண்டுகளில் திமுக மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்களை அவர்களுக்கு நியாபகபடுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது, சென்ற முறை தோல்வி அடைந்த பகுதிகளில் இம்முறை வெற்றி பெற அங்கு முக்கிய அமைச்சர்களை நியமித்திருப்பது போன்ற நடவடிக்கைகளை திமுக அரசு செய்து வருகிறது.
இந்நிலையில் தான் திமுகவை எதிர்க்க மற்றொரு சக்தி அரசியலில் குதித்தருப்பது புதிய புயலை கிளப்பியது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே திமுகவை எதிரி என்று கூறி அதனை கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய் மிகவும் பிரபல நடிகர் என்பதால், அவருக்கு இயல்பாகவே மக்கள் ஆதரவு அதிகம். இதில் இவர் கட்சி துவங்கிய உடன் ரசிகர் கூட்டம் அனைத்தும் தொண்டர்கள் கூட்டமாக மாற ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் விஜய் திமுகவை எதிர்ப்பதால், அவரது இளம் தொண்டர்களும் திமுகவை வசைபாட ஆரம்பித்து விட்டனர். மேலும் திமுகவிற்கு மாற்று நாங்கள் தான் என்று அதிமுகவும், தவெகவும் மாற்றி மாற்றி கூறி வந்தன. இது திமுகவிற்கு பாதகமாக இருந்தாலும், ஒரு வகையில் திமுகவின் பலத்தை அதிகரித்தது.
திமுக பலம் வாய்ந்த கட்சியாக இருப்பதால் தான் அனைவரும் அதனை எதிர்க்கிறார்கள் என்ற கருத்தும் நிலவியது. இவ்வாறு திமுக குறித்து விஜய் பேசி வரும் சமயத்தில், இன்று ஈரோட்டில் நடந்த பிரச்சாரத்திலும் விஜய் திமுகவை விமர்சித்தார். இதற்கு பதிலடியாக பேசிய, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் மக்களிடம் தங்களது இருப்பை காட்டி கொள்ள திமுகவை பயன்படுத்தி கொள்கிறார்கள். வேறு யாரையும் போட்டியாக சொல்வதில்லை, அந்த அளவிற்கு திமுக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார்.