டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு! காரணம் என்ன?

Photo of author

By Sakthi

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது டாலரை வாங்க நிர்ணயிக்கப்படும் ரூபாய் அதிகரிக்க, அதிகரிக்க இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது. இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைய காரணம் என்ன? எதன் அடிப்படையில் வீழ்ச்சி அடைந்ததாக கணக்கிடப்படுகிறது? இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தால் மக்கள் சந்திக்க போகும் பாதிப்புகள் என்னென்ன?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. 2021 டிசம்பர் மாதத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில், அது 80 ரூபாயை கடந்து அதிகரித்துள்ளது.

10 மாதங்களிலேயே 5 ரூபாய்க்கு மேல் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் நாணய மதிப்பும் அமெரிக்க டாலர் மதிப்பீட்டை வைத்தே கணக்கிடப்படுவதாக சொல்லப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் நாணய மதிப்பீடும் குறைந்து கொண்டே தான் செல்கின்றன.

ஆனால் அமெரிக்க டாலர் மதிப்பு மட்டும் தொடர்ந்து அதிகரிப்பதற்கான காரணம் என்ன? இந்திய ரூபாயின் இந்த தொடர் சரிவுக்கான காரணம் என்ன? அதாவது தொடர்ந்து நடைபெற்று வரும் ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான போர் மற்றும் அமெரிக்க வர்த்தக நெருக்கடி உள்ளிட்டவை இதற்கு காரணமாக முன்வைக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் சற்றேடக்குறியே கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது அதனை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு நாடு தன்னுடைய வட்டி விகிதத்தை உயர்த்தினால் அந்த நாட்டின் மீதான கடன் பத்திரங்களின் வட்டி வருவாய் அதிகரிக்கும்.

இதன் காரணமாக பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களின் மீது அதிக முதலீடு செய்வார்கள். அமெரிக்கா வட்டி விகிதங்களை அதிகரித்ததன் காரணமாக இந்தியாவில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் பலர் இந்தியாவிலிருந்து தங்களுடைய முதலீட்டை திரும்ப பெற்று அமெரிக்காவில் முதலீடு செய்ய துவங்கி விட்டார்கள். இதன் காரணமாக இந்தியாவில் டாலரின் இருப்பு குறைகிறது ஆகவே தான் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது.