கொரோனா பொது முடக்கம் காரணமாக தமிழ்நாடு அரசு,மக்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வந்தது.ஆனால் ஆகஸ்ட் மாதத்திலிருந்து இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது,வழக்கம்போல் விலை உள்ள ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும்,ஆனால் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு அவரவர்கள் வீடு வந்து டோக்கன் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.அந்த டோக்கன் அடிப்படையில் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது.
ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருள் வழங்குவதற்கான டோக்கன் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நான்காம் தேதி வரை கொடுக்கப்படும் என்றும் ஐந்தாம் தேதி முதல் குறிப்பிட்ட சமூக இடைவெளியுடன் ரேஷன் பொருட்களை மக்கள் வாங்கிச் செல்லலாம் என்றும் கூறியிருந்தது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி இன்று டோக்கன் வழங்குவதற்கு கடைசி நாளாகும் மேலும் டோக்கன் வழங்காமல் விடுபட்ட குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருள் வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
மேலும் அமல்படுத்தப்பட்ட புதிய திட்டத்தின்படி இந்த மாதத்தில் இருந்து ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு மாஸ்க்குகள் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.