திருவிளையாடல் படத்தில் இப்பாடலை எழுதியவர் இவரா? கண்ணதாசன் பெயர் இருப்பது ஏன்?

0
356
#image_title

1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் இயக்குநர் ஏ. பி. நாகராஜன் இதில் நக்கீரனாக நடித்து இருப்பார்.

 

இந்த படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது என்றே சொல்லலாம் சிவாஜி கணேசன் நடித்த எத்தனையோ படங்கள் இருப்பினும் இந்த படம் மிகவும் வேறுபட்டது. மீண்டும் மீண்டும் பார்க்கக் கூடிய படங்களில் இந்த படமும் ஒன்று என்று பத்திரிக்கையில் கூட வெளிவந்திருக்கிறது.

 

இத்திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை வென்றது. 1965 வது ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்களுள் இத்திரைப்படத்திற்கு மூன்றாவது இடமாகும்.

 

இதில் டி எஸ் பாலையா அவர்கள் உலகின் புகழ்பெற்ற ஹேமநாத பாகவதர் ஆக நடித்திருப்பார் அவருக்கு இருந்த தலைகனம் காரணமாக அவற்றை உடைக்க வேண்டும் என ஈசனே ஒரு நாடோடி போல் அந்த பாகவதரின் கர்வத்தை உடைப்பது போல் ஒரு பாடல் இருக்கும். அதுதான் ” பாட்டும் நானே பாவமும் நானே” என்ற பாடல்.

 

இந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன் என்றுதான் அனைத்து செய்திகளிலும் இருக்கும். ஆனால் இதை கண்ணதாசன் எழுதவில்லை.

 

கா. மு ஷெரீப் என்ற கவிஞர் எழுதி இருக்கிறார். ஏ பி நாகராஜன் அவர்களும் ஷெரிப் அவர்களும் மிகவும் நண்பர்கள்.

 

பாடலை எழுதியவர் காமு ஷெரிப் அவர்கள் . இதை தா ஜெயகாந்தன் என்பவர் தனது நூலில் வெளியிட்டுள்ளார்.

 

எழுதிய பாடலுக்கு மற்றொரு கவிஞனின் பெயர் வெளிவந்த நிலையிலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாத இந்த கவிஞர் இருந்திருக்கிறார். மிக்க நன்றாக தானே இருக்கிறது என்று மனம் உவந்து பாராட்டியும் இருக்கிறார். அதை மனமுவந்து பாராட்டிய தை அந்தப் பண்பை நான் மிகவும் மதித்தேன் என தா ஜெயகாந்தன் அவர்கள் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஹீரோவாக நடித்த படமும், வில்லனாக நடித்த படமும் ஒரே நாளில் ரிலீஸ் ! எந்த படம் வெற்றி?
Next articleகேட்காமல் கொடுப்பவர் எம்ஜிஆர் என்பதற்கு இந்த செயல் சான்று