இனி இந்த செல்போன் வைத்திருப்பவர்கள் Watsapp உபயோகிக்க முடியாது!! வெளியான அதிர்ச்சி தகவல்!!
வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உலகை சுற்றி நடக்கும் அனைத்து செய்திகளும் நம் உள்ளங்கைக்குள் இருக்கும் கைபேசிக்குள் அடங்கி விடுகிறது.அதிலும் முக்கியமாக Youtube,WhatsApp,Instagram போன்றவற்றை பல கோடி மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.அதிகப்படியாக WhatsApp என்ற மென்பொருள் தான் அனைவராலும் மிகவும் விரும்பப்படுகிறது.
அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அதில் இருக்கும் புது புது சேவைகள் தான். வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை அனைவருக்கும் எளிதில் அனுப்பலாம்.மேலும், பலவிதமாக WhatsApp குழுக்கள் அமைப்பது,வீடியோ கால் செய்வது,என அதன் சேவைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.அந்தவகையில் அதன் வசதியை மேம்படுத்த புதிய மென்பொருள்கள் ஒவ்வொரு நாளும் WhatsApp-ல் சேர்க்கப்பட்டு வருகிறது.இந்த புது மென்பொருள்களை பழைய ஸ்மார்ட் போன்களில் நிறுவுவதில் பெரிய சிக்கல் உள்ளது.
ஆனால் புதிய ஆண்ட்ராய்டு போன்களில் இதனை எளிதில் நிறுவி விடலாம்.எனவே தற்போது WhatsApp தனது ஆதரவை 35 போன்களில் இருந்து நீக்க போவதாக அறிவித்துள்ளது.அதில் Samsung, Apple, LG மற்றும் Sony போன்ற மொபைல் போன்கள் அடங்கும்.மேலும் இந்த வரிசையில் மோட்டோ ஜி, மோட்டோ எக்ஸ் மற்றும் சோனி Xperia Z1, சோனி எக்ஸ்பீரியா இ3, ஹூவாய்,Apple போன்ற நிறுவனங்களின் போன்களும் இடம் பெற்றுள்ளன.
இந்தச் செய்தி செல்போன் பயனீட்டாளர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.எனவே மக்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்த வேண்டுமெனில் ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு அல்லது iOS 12 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகளுக்கு மாற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.