Thottal Surungi: கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Photo of author

By Priya

Thottal Surungi: பெரும்பாலான செடிகளை நம் வாழும் இந்த சுற்று சூழலில் பார்த்துள்ளோம். ஆனால் அந்த செடிகளை பற்றி நமக்கு முழுமையாக தெரியாது. சில செடிகள் மருத்துவ குணங்கள் கொண்டாதக இருந்தாலும் ஒரு சில செடிகள் ஆன்மீக ரீதியாகவும் வணங்கப்பட்டு வருகிறது.

துளசி இலையில் எவ்வளவோ மருத்துவ பயன்கள் உள்ளன. ஆனால் கோயில்களில் அதனை ஆன்மீக ரீதியாக தான் பார்க்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிராமங்களில் வளர்ந்த பிள்ளைகளால் அதிக அளவில் பார்க்கப்பட்ட செடிகளில் ஒன்று தான் இந்த தொட்டால் சுருங்கி அல்லது தொட்டால் சிணுங்கி செடி.

அதனை தொட்டு தாெட்டு விளையாடிய காலங்கள் எல்லாம் இன்றளவும் நம் நினைவில் நிற்கும். ஆனால் இந்த தொட்டால் சிணுங்கி இலை மருத்துவ குணத்துடன் ஆன்மீக ரீதியாகவும் பயன்களை கொண்டது. அதனை பற்றி தற்போது (thottal surungi benefits in tamil) காணலாம்.

தொட்டாற் சுருங்கி

இந்த தொட்டால் சிணுங்கியை மந்திர மூலிகை, மாய மூலிகை, வசிய மூலிகை என்றெல்லாம் கூறுவார்கள். இந்த தொட்டால் சிணுங்கியை காமவர்த்தினி என்றும் கூறுவார்கள். இந்த செயின் இலைகள் சுருங்குவதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் இந்த செடியின் இலை, காம்பு, தண்டுகளில் அதிக ஈரப்பதம் கொண்டவையாக இருக்கும். அதன் மேல் எதிரிகளின் தொடுதல் உணர்வு ஏற்பட்டவுடன் இயற்கையாகவே இந்த செடியில் அமில சுரந்து இலை, தண்டுகளில் உள்ள ஈரப்பதம் முழுவதும் உறிஞ்சப்படுட்டு சுருங்கி கொள்கிறது.

இந்த செடியை ஆண், பெண் இருபாலரும் உட்கொண்டால் மலட்டு தன்மை நீங்கும்.

இந்த செடி மற்ற செடிகளை போல் இல்லாமல் தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக தன்னிச்சையாக செயல்பட்டு எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்கிறது. மேலும் இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது.

கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி

தொட்டால் சிணுங்கி செடியை வாஸ்து செடியாகவும் வளர்க்கலாம். மேலும் இந்த செடிக்கு காந்த சக்தியும் உள்ளது. இந்த செடியை வீட்டில் வளர்ப்பதனால் கண் திருஷ்டி ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இந்த செடியை வீட்டில் வளர்ப்பதனால் நேர்மறையான ஆற்றல்கள் மட்டும் தான் கிடைக்கும்.

இந்த செடியை தினந்தோறும் தொட்டு வழிபட்டு வந்தால், நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். இதன் செடிகள் கிடைத்தால் அதனை எடுத்து வந்து வீட்டின் பூஜை அறையில் வைத்து தினந்தோறும் அதனை கையில் வைத்து நீங்கள் நினைத்த காரியம் நடக்க வழிபட்டு வந்தால் கட்டாயம் கேட்ட வரத்தை கொடுக்கும் என்பதும் நம்பிக்கை.

இந்த செடியை மாந்ிரிக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனை கையில் வைத்து நல்ல காரியங்களுக்காக வேண்டப்படும் போது மட்டும் நடக்கும் என்பதும் ஐதீகம்.

மேலும் படிக்க: ஒரு முறை இந்த தீபம் ஏற்றி பாருங்கள்.. உங்கள் வீட்டில் உள்ள கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்..!!