பல மாநிலங்களை அச்சுறுத்தும் புதிய வகையிலான நோய்த்தொற்று!

0
95

நாடு முழுவதும் அனைத்து நோய் தொற்றின் இரண்டாவது அலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. நோயிலிருந்து மீண்டு வருபவர்கள் சற்றே நிம்மதி அடைந்து வருகிறார்கள். நாடு முழுவதும் நோய் தொற்றுக்கான தடுப்பு ஊசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த கட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது .அதாவது இந்த நோய்களில் இருந்து மீண்டு வருபவர்கள் கருப்பு பூஞ்சை எனும் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் அந்த தகவல்.

இந்த நோயின் அறிகுறிகளாக தலைவலி, காய்ச்சல் கண்களில் வலி நாசியில் பிரச்சனை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.நோய் தொற்றினால் மக்கள் பாதிக்கப்பட்டதில் இருந்து தற்சமயம் வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் 52 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு பலியாகி இருப்பதாக அந்த மாநில அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த நோய் தொடருக்கான சிகிச்சை கொரோனா தொற்றிற்கான சிகிச்சை போலில்லாமல் வேறு விதமான சிகிச்சையாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. மகாராஷ்டிரா அரசுக்கு இந்த புதிய வகையிலான நோய்த்தொற்று கூடுதல் சுமையை உண்டாக்கி இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. நோய்த்தொற்றின் முதல் அலையின் சமயத்தில் கருப்பு பூஞ்சை தொற்றிற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறிய அளவிலான நபர்களே உயிரிழந்திருக்கிறார்கள்.

ஆனால் தற்சமயம் அதன் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. கண்கள் வழியாக பரவும் இந்த நோய் மூக்கு வழியாகவும் பரவுகிறது. மூளையை பாதிக்கிறது என சொல்லப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதற்கு முன்னரே கருப்பு பூஞ்சை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களுடைய ஒரு கண் பார்வையை இழந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், ஹரியானா மாநிலத்தில் 115 பேருக்கு இந்த புதிய வகை நோய் தொற்று கண்டறியபட்டிருப்பதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கருப்பு பூஞ்சை வைரஸ் சிறப்பு சிகிச்சைக்காக மாநிலம் முழுவதிலும் இருக்கின்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 20 சிகிச்சை படுக்கைகள் கொண்ட அறை அமைப்பதற்கு ஹரியாணா மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.