அடுத்தடுத்து ஒரே பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மூன்று டோஸ்கள்! அரசின் கவனமற்ற செயல்!

0
103
Three doses given to the same woman in a row! Government's careless act!
Three doses given to the same woman in a row! Government's careless act!

அடுத்தடுத்து ஒரே பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மூன்று டோஸ்கள்! அரசின் கவனமற்ற செயல்!

தற்போதுள்ள கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், போர் கால நடவடிக்கையாக மாநில மற்றும் மத்திய அரசுகள் தடுப்பூசி போட்டால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்று அறிவித்ததன் காரணத்தினால், அனைவருக்கும் கட்டாய தடுப்பூசி என்று அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

முதலில் மக்களிடையே இதற்கு அதிக ஆர்வம் காட்டப்படவில்லை என்றாலும், கொரோனா பாதித்த நபருக்கு ஏற்படும் அடுத்தடுத்த பாதிப்புகளினால் அவர் உயிர் இழக்கும் தருவாய் அல்லது கண் பார்வை நோய் ஏற்படும் அறிகுறிகள் தெரிவதால் மக்கள் அவர்களாகவே முன் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில், தானே மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் மனைவி அங்கே ஆனந்த் நகரில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடச் சென்று உள்ளார். அங்கு அவருக்கு சில நிமிட வித்தியாசத்தில்  அடுத்தடுத்து 3 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன. இதனால், அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து அவர்  தனது கணவரிடம் கூறி உள்ளார்.  இதன் காரணமாக இந்த விவகாரம்  வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன் பின்னர் நடந்த விசயங்களை அவரின் கணவர் உள்ளூர் அதிகாரிகளிடம்  பிரச்சினையை கூறி உள்ளார்.

இந்த பிரச்சனையின் தீவிரத்தை தொடர்ந்து,  அவரது மனைவியின் ஆரோக்கியம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பெண், கூறுகையில், தனது கணவர் மாநகராட்சியில் பணிபுரிவதால் புகார் எதுவும் அளிக்க விரும்பவில்லை என்று கூறி இருப்பதாக தெரிவித்தார்.

இது குறித்து அந்த பெண்ணின் கணவன் கூறுகையில், எனது மனைவி முதல் முறையாக கொரோனா தடுப்பூசி போட சென்றுள்ளதால்  தடுப்பூசி செயல்முறை குறித்து அவர் எதுவும்  அறிந்திருக்கவில்லை. அனைவரையும் போல தடுப்பூசி போட்ட பின் அவருக்கும் காய்ச்சல் இருந்தது, ஆனால் அது மறுநாள் காலையில் குறைந்து விட்டது. மேலும் தற்போது அவர் நன்றாகவே இருக்கிறார் என்றும் கூறினார்.

இது குறித்து பாரதீய ஜனதா எம்.எல்.ஏ நிரஞ்சன் தவ்கரே கூறும் போது இது போன்ற கொடுமையான செயலை எவ்வாறு கவனிக்காமல் விட்டார்கள். அதுவும் டோஸ்கள் பற்றாக்குறை என மத்திய அரசிடம் அணைத்து மாநில அரசுகளும் கேட்டு கொண்டுள்ள இந்த சூழ்நிலையில் ஒரே சமயத்தில் கவனிக்காமல் இருக்க முடியும். மேலும் தவறு செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என கூறினார்.

இது குறித்து தானே மேயர் நரேஷ் மஸ்கே கூறும்போது இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Previous articleகடந்த ஆண்டு திருமணமான நிலையில் மாணவி உடன் மூன்று ஆண்டுகளாக தொடர்பு! அதிர்ந்த பெற்றோர்!
Next articleசெல்போனினால் பரிதாபமாக இறந்த சிறுவன்! மேலும் 3 சிறுவர்கள் படுகாயம்?