பகல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகள் யார்?!.. வரைபடங்கள் வெளியீடு!…

Photo of author

By அசோக்

பகல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகள் யார்?!.. வரைபடங்கள் வெளியீடு!…

அசோக்

ஜம்மு காஷ்மீர் ஆனந்த் நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் உள்ள பஹல்கேம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 29 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் 23 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அதோடு பலரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம், ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் தேனிலவுக்கு சென்ற அரியானவை சேர்ந்த 26 வயது கடற்படை அதிகாரி கொல்லப்பட்டிருக்கிறார். அப்போது அவரின் மனைவியிடம் ‘உன்னை கொல்ல மாட்டோம். நடந்த சம்பவத்தை மோடியிடம் சொல்’ என தீவிரவாதிகளில் ஒருவர் சொல்லியிருக்கிறார். இதை அந்த பெண்ணே இராணுவ அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறார். காட்டுக்குள் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவப்படை ஈடுபட்டிருக்கிறது. அடர்ந்த காடு என்பதால் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

terrorist

 

இந்நிலையில், தீவிரவாதி தாக்குதலில் தொடர்புடைய மூன்று பேரின் உருவ வரைபடங்கள் வெளியாகியுள்ளது. 6 முதல் 8 தீவிரவாதிகள் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சொல்லப்படும் நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வரைபடங்கள் வெளியாகியுள்ளது. அஷீஃப் ஃபௌஜி, சுலைமான் ஷா, அபுத் தல்ஹா ஆகியோரின் உருவப்படம் வெளியாகியுள்ளது. மற்ற தீவிர்வாதிகளின் தகவல்களை சேகரிக்கும் பணியில் இந்திய இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.