டிக்டாக்-ற்க்கு பதில் வேறொரு செயலி பயன்பாட்டிற்கு வரும்!!அமெரிக்கா அதிரடி?

0
154

பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆஃப்கள் தடை செய்யப்பட்டன.தற்போது அமெரிக்காவிலும் டிக்டாக் தடை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் டிக்டாக் செயலிக்குபதில் வேறொரு செயலியை பயன்படுத்தலாம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கும் சீனாவிற்கும் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருகின்றன. இந்நிலையில் சீனாவுக்கு எதிராக பல பொருளாதார கோட்பாடுகளை விதித்து வருகிறது அமெரிக்கா.இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் மற்றும் டிரம்பின் உயரதிகாரிகளும்
டிக்டாக் செயலி தடை செய்வதற்கு கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் டிக்டாக்-யை தடைசெய்ய திட்டமிட்டிருப்பதாகவும்,டிக்டாக்-கிற்க்கு பதில் வேறு ஒரு செயலியை பயன்பாட்டிற்கு கொண்டுவர யோசனை செய்வதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

பல உலக நாடுகளும் சீனாவுக்கு எதிராக திரும்பி கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட இந்தச் செய்தியானது சீனர்களிடையே அதிர்ச்சியை அளித்துள்ளது.

Previous articleவிஜய் சேதுபதியின் அடுத்த படம் என்னன்னு தெரியுமா?இந்த படத்தில் இணையும் விக்ரம்வேதா படத்தின் பிரபலம்!
Next articleஎம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு பச்சை துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிர்ச்சி தகவல்