டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து தற்கொலை முயற்சி! காரணம் ரவுடி பேபி சூர்யாவா?

Photo of author

By Kowsalya

டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து தற்கொலை முயற்சி! காரணம் ரவுடி பேபி சூர்யாவா?

Kowsalya

சினிமா டிவி தொலைக்காட்சி என பிரபலம் அடைந்தவர்கள் பலர் ஆனால் டிக் டாக் மூலம் தற்போது அனைவரும் பிரபலமாகி வந்தனர்.

அதில் ஒருவர்தான் ஜி பி முத்து. அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கார்பெண்டர் வேலை செய்து வருபவர். அவரும் ரவுடி பேபி சூர்யாவின் டிக் டாக்கில் போட்ட ஆட்டங்கள் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. தனிப்பட்ட சமூகத்தினரை கிண்டல் செய்து, வீடியோ வெளியிட்டதாக போலீஸ் விசாரணை வரை கூட சென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு வீடு திரும்பினார் என குறிப்பிடத்தக்கது.
சீனாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக நமது இந்திய திட்டக் செயலியை முடக்கியது.

டிக் டாக் தடையால் பிரதமர் மோடிக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் இன்ஸ்டாகிராமில் பல வீடியோக்களை பொது வந்த நிலையில் சமீப காலமாக குடும்ப சூழ்நிலை காரணமாக வீடியோ பொட முடியவில்லை என்பதையும் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜி பி முத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவர் தற்கொலைக்கு காரணம் ரவுடி பேபி சூர்யா இல்லையாம்! குடும்ப சூழ்நிலை மற்றும் தீராத வயிற்று வலி காரணமாக இந்த முடிவுக்கு வந்துள்ளதாக போலீசாரிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை கேட்டு அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.