திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் நிரம்பி வழிந்த பக்தர்களின் கூட்டம்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 15 ஆம் தேதியில் இருந்து வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் தினந்தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது.

ஆனாலும் கோவில் கடல் நாழிக்கிணறு பகுதியில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை என்ற நிலையில், சென்ற சில தினங்களாகவே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருக்கிறது. சென்ற 15ஆம் தேதி சஷ்டி திதி 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை நேற்று முன்தினம் ஆடி மாத தொடக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற காரணத்தால், கோவிலில் தொடர்ச்சியாக பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அதிகாலை முதலே பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் நின்று சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார்கள். கோவில் வளாகம் கடற்கரை நாழிக்கிணறு போன்ற இடங்களில் ஏராளமான காவல்துறையினர் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தார்கள்.