அனுமன் பிறந்த இடம் இதுதானாம்!

Photo of author

By Sakthi

அனுமன் பிறந்த இடம் இதுதானாம்!

Sakthi

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது திருமலையில் ஆகாச கங்கை தீர்த்தம் அருகில் இருக்கின்ற அஞ்சனாத்ரி மலையில் அனுமன் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அனுமன் பிறப்பிடம் பல ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து சென்ற ஜூலை மாதம் 30 மற்றும் 31 ஆம் தேதி கருத்தரங்கு நடைபெற்றது அதில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பீடாதிபதிகள், மடாதிபதிகள், தொல்லியல் துறை அறிஞர்கள் பலர் பங்கேற்றனர். அவர்கள் தெரிவித்த ஆலோசனையின் படி அதோடு தகவல் தொடர்பான விவரங்கள் புத்தகமாக வெளியிடுவோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜாபாலி தீர்த்தத்தில் இருக்கின்ற ஆஞ்சநேயர் கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அது சார்ந்த முன்மொழிவுகளை வருவாய்த்துறைக்கு அனுப்பி இருக்கின்றோம். அங்கே ஆஞ்சநேயர் சிலை அமைப்பதுடன் ஒரு பூங்காவும் ஏற்படுத்தப்படும் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.