தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!! 18 வயது முடிந்தவர்களுக்கு 4 லட்சம் வரை கடன்!!

0
48
tamil-nadu-government-provides-loans-with-subsidies
tamil-nadu-government-provides-loans-with-subsidies

சுய உதவி குழு உறுப்பினர் மற்றும் நகர்ப்புற ஏழை ஆகியோர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுய தொழில் தொடங்க நினைத்தால் அவர்களுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டு வருகின்றது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது திருநெல்வேலி மாவட்டம் நகர்ப்புற ஏழை மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களுக்காக சுய தொழில் தொடங்குவதற்காக வங்கி கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் நகர்ப்புற வாழ்வாதார இயக்க மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 2025-26 ஆம் ஆண்டில் தனிநபர் மற்றும் குழுக்களுக்கு வங்கி தொழிற்கடன் வழங்கப்படுகின்றது. அதனால் மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராக கொண்டுள்ள மாவட்ட அளவிலான தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் தனிநபர் தொழில் கடன் பெற ஒரு சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. தனிநபர் தொழில் கடன் பெறுவதற்கு 18 வயதிற்கு மேற்பட்ட நகர்ப்புற ஏழைகளுக்கு 4 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும்.

மேலும் குழு தொழில் கடன் பெற 18 வயதுக்கு மேற்பட்ட நகர்ப்புற ஏழைகளில் இரண்டு நபர் முதல் ஐந்து நபர்கள் வரை கொண்ட தொழில் குழுக்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த திட்டங்கள் மூலம் சுயதொழில் தொடங்குவோர் எந்தவித அச்சமும் இல்லாமல் சுய தொழிலை தொடங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நகர்ப்புற ஏழைகள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் சுய தொழிலை தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமீண்டும் முக்கிய பதவிக்கு செல்லும் உதயநிதி!? 2026 – தேர்தலுக்காக திமுக போடும் மாஸ்டர் பிளான்!!
Next articleலீவு ஓவர்… பள்ளி திறப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!