2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பதியில் பிரமோற்சவ விழா!

0
147

திருப்பதி அன்னை பவனில் பக்தர்கள் குறைக்கேற்பு நிகழ்ச்சி தொலைபேசி மூலமாக நடந்தது இதில் பக்தர்களின் கேள்விகளுக்கு தர்மாரெட்டி பதில் வழங்கினார்.

திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று முடிவடைந்து 2 வருடங்களுக்கு பின்னர் மாட விதிகளில் நடைபெறவிருக்கும் வாகன சேவைகளில் ஏழுமலையான் தரிசனம் தரவிருக்கிறார்கள்.

பிரமோற்சவத்தை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் மாலை 5.45 மணி முதல் 6.15 மணி வரையில் மீன லக்னத்தில் கருட கொடியேற்றம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஏழுமலையானுக்கு ஆந்திர மாநில அரசின் சார்பாக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் வழங்கி வழங்கியிருக்கிறார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளாக அக்டோபர் மாதம் 1ம் தேதி கருட வாகனமும், 2ஆம் தேதி தங்கரதமும், 4ம் தேதி தேரோட்டமும், நடைபெறவிருக்கிறது.

நோய் தொற்று பரவல் காரணமாக, நிறுத்தப்பட்டிருந்த அகண்ட பரிணாம சங்கீர்த்தன நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் மறுபடியும் ஆரம்பமாகும் என்று சொல்லப்படுகிறது.

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களால் திருப்பதியில் தொடங்கி வைக்கப்பட்ட ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் ஹிருதயாலயா மருத்துவமனையில் இதுவரையில் 4.90 குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்கள்.

இதில் குறிப்பாக பிறந்து 7 தினங்களே ஆன பெண் குழந்தைக்கு சமீபத்தில் தான் இருதய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தார்கள், இங்கே இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல குழந்தைகள் குறித்து அனைத்து வகையான நோய்களுக்கும் சிறந்த சிகிச்சை வழங்கும் விதத்தில் ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 2 வருடங்களில் முடிக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Previous articleமணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வனில் கமல்ஹாசன்… ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
Next articleரோஹித் ஷர்மாவை தகாத வார்த்தையில் திட்டினாரா ஹர்திக் பாண்டியா?… சர்ச்சையைக் கிளப்பிய வீடியோ!