திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலில் மூன்று தினங்கள் நடைபெறும் ஜேஷ்டாபிஷேக விழா நேற்று முன்தினம் ஆரம்பமானது. முதல் நாளான 19ஆம் தேதி சத கலச சொப்பணம் , மகா சாந்தி ஹோமம் 8:30 முதல் 10:30 வரை நடந்தது. அதன் பின்னர் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உள்ளிட்டோர் கோவிந்தராஜ சாமியுடன் கோவிலின் திருமண மண்டபத்தில் உற்சவ மூர்த்திக்கு சுவர்ண திருமஞ்சனம் ஸ்னபன திருமஞ்சனம் நிறுத்தப்பட்டது.
பால், தயிர், தேன் ,சந்தனம், மஞ்சள் மற்றும் தேங்காய் நீரில் அபிஷேகம் செய்யப்பட்டு அதன் பிறகு சுவாமியின் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கவசம் அணிவிக்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உள்ளிட்டோர் கோவிந்தராஜ சாமியுடன் திருவீதி உலா வந்தார்கள்.
இந்த நிகழ்வில் கோவில் உதவி செயல் அலுவலர் ரவி குமார் ரெட்டி, கண்காணிப்பாளர் வேங்கடாத்ரி மற்றும் கோவில் ஆய்வாளர் முன் இந்திர பாபு உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.