கல்லூரி மாணவர்களுக்கு 50000/- உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல நல்ல திட்டங்களை கொடுத்து வருகிறது.அந்த வகையில் நான் முதல்வன் திட்டம் மூலம் பல வகையான பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை அரசாங்கம் ஏற்படுத்தி தருகிறது.இந்த திட்டத்தின் மூலம் நிறைய மாணவர்கள் பயன் அடைந்து உள்ளனர்.
மேலும் தாலிக்கு தங்கம் என்றிருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தை மாற்றி(“புதுமை பெண்”)உயர்கல்விக்கு உதவி பெறும் திட்டமாக அதனை திருத்தி அமைத்தது.இதன் வழியாக பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்தது.ஏனெனில் பல பெண்கள் பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு கல்லூரிகளில் சென்று படிக்க முடியாமல் தவித்து வந்தனர்,எனவே தான் அரசு இந்த புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.இந்த திட்டம் மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதனை தொடர்ந்து தான் தற்போது மாணவர்களையும் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது,அந்த வகையில் “தமிழ் புதல்வன்” எனும் புதிய விரைவில் தொடங்கப்படும் எனவும், அவர்களுக்கும் ரூபாய் 1000-ம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்த அரசு நிதி வழங்கி வருகிறது.அந்த வகையில் 2023-24 ஆண்டு கால கட்டத்திற்கான கல்வி உதவி தொகை 24 மாணவர்களுக்கு ரூபாய் 50,000/- தரப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருந்தால் அவர்களுக்கு நிரந்தர வைப்பு நிதியாக ரூபாய் 25,000/-வழங்கும் திட்டத்திற்கு தற்போது ஆவணங்கள் சரி பார்க்கும் பணிகள் நடந்து வருகிறது.