தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை புதிய வாட்ஸ்அப் சேனல் தொடக்கம்
தமிழக அரசு புதிய வாட்ஸ்அப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தமிழக அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளலாம். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை வாட்ஸ்அப் சேனல் ஒன்றை
தொடங்கியுள்ளது.
அதன் மூலம் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை விரைவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நல திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த திட்டங்கள் குறித்து முழுமையாக மக்கள் அறிந்து கொண்டு, அதன் பயனை முழுமையாக அடைய துணை புரியும் வகையில் தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் போன்றவற்றில் பக்கங்கள் தொடங்கி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதன் அடுத்த கட்டமாக தமிழக அரசு வாட்ஸ்அப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. அதற்கு ” TNDIPR, Govt. of Tamil Nadu “என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் இணைந்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் அதில் வெளியிடப்படும் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சமூக வலைதள பக்கங்களைக் காண முடியும் என தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது