மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காத மின் நுகர்வோருக்கு அவகாசம் வழங்கிய மின்வாரியம்..!

Photo of author

By Janani

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர் மிண் கட்டணம் செலுத்த இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் நுகர்வோர் அனைவரும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இது தொடர்பான செய்தி குறுஞ்செய்தி வாயிலாக அனைத்து மின்நுகர்வோருக்கும் அனுப்பப்பட்டது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பின்னே கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆதாரை இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மின்வாரியம் தெரிவிக்கும் போது, ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு 2 நாட்கள் கட்டணம் செலுத்த இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 24 முதல் நவம்பர் 30ம் தேதி மின்கட்டணம் செலுத்த வேண்டிய தாழ்வழுத்தப் பிரிவு மின்நுகர்வோர்களுக்கு 2 நாட்கள் வழங்கப்படுவதாகவும் இது ஆதார் இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.