டிஎன்பிஎல் கிரிக்கெட்! சேப்பாக்கம் சேலம் அணிகள் மோதல்!

0
219

ஐந்தாவது டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடந்து வருகிறது .நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் dragon’s 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியை தோற்கடித்தது. திண்டுக்கல் அணி பெற்ற 2-வது வெற்றி இது என சொல்லப்படுகிறது. திருச்சி அணி இரண்டாவது தோல்வியை சந்தித்திருக்கிறது.பத்தாவது நாளான நேற்றைய தினம் இரண்டு ஆட்டங்கள் நடந்தது மாலை மூன்று முப்பது மணி அளவில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான செபாக் சூப்பர் கில்லீஸ் அணி சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை சந்தித்தது.

சேப்பாக்கம் சூப்பர் கிங்ஸ் அணி திருப்பூர் அணியுடன் மோதிய முதல் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியிடம் தோல்வியை சந்தித்தது. நேற்றைய தின ஆட்டத்தில் சேலம் அணியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது.

சேலம் அணி கோயமுத்தூர் அணியுடன் மோதிய முதல் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது இரண்டாவது போட்டியில் அந்த அணி திருப்பூர் அணியை வெற்றி கொண்டது. இந்த நிலையில் நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் மதுரை அணியும், கோவை அணியும், சந்தித்தனர்.

கோவை அணி 3 ஆட்டத்தில் வெற்றி பெற்று ஒரு ஆட்டத்தில் தோல்வியை கண்டு அதோடு இன்னொரு ஆட்டம் முடிவு எதுவும் சொல்லப்படாமல் இருந்தது. இவை அனைத்தையும் சேர்த்து 3 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

மதுரை அணி ஒரு வெற்றி ஒரு தோல்வி என்று இரண்டு புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணியும் இரண்டாவது வெற்றி ஆர்வத்தில் இருக்கிறது.

Previous articleமுக்கிய வீரருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று! அதிர்ச்சியில் இந்திய அணி!
Next articleஒலிம்பிக் வில்வித்தை போட்டி! இரண்டாவது சுற்று தான் நடையை கட்டிய இந்திய வீரர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here