தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்ற மாதம் 19ஆம் தேதி ஆரம்பமானது தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி இருந்தார்கள்.ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவுற்று இருக்கின்றன.
ரூபி திருச்சி வாரியர்ஸ் 10 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், நடப்புச் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 9 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், திண்டுக்கல் dragons’ 6 புள்ளிகளுடன் 3வது இடத்தையும், லைகா கோவை கிங்ஸ் அணி 7 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும், பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன.
பிளே ஆப் சுற்று நாளை ஆரம்பமாகிறது சென்னையில் நாளை ஆரம்பமாகும் குவாலிபயர் ஆட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்த ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், இரண்டாவது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக குவாலிஃபைட் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வெளியேற்றுதல் சுற்று நாளை மறுதினம் ஆரம்பமாகும் சுற்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்த திண்டுக்கல் அணியும், நான்காவது இடத்தை பிடித்த கோவை அணியும், நேருக்கு நேர் சந்திக்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி குவாலிபயர் ஒன்றில் தோல்வியுற்ற அணியுடன் மோதும் இது குவாலிபயர் இரண்டாவது சுற்று என்று சொல்லப்படுகிறது.13-ஆம் தேதி நடைபெற இருக்கின்ற குவாலிபயர் இரண்டாவது சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் டிஎன்பிஎல் இறுதிப் போட்டி ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் குவாலிபயர் ஒன்றில் வென்ற அணியும் குவாலிபயர் இரண்டில் வென்ற அணியும் மோதுகின்றன.