TNPSC Group 4 Exam 2024 Result : டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு 2024 ஜூன்-9 நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என ஆர்வத்தில் இருந்தார்கள். அதில் 15.88 லட்சம் பேர் தேர்வு எழுதி உள்ளார்கள். முதலில் 6,244 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிறகு மேலும் அரசு காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரித்தது. அதன் அடிப்படையில் தற்போது 8,932 காலி பணியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு இந்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன என்றும் தகவல் வெளியாகின.
ஆனால் இந்த மாதம் முடிவடைய இன்னும் நான்கு நாட்களே உள்ளன. இதை அடிப்படையாக கொண்டு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும், அதற்கான நடவடிக்கை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த வேலை வாய்ப்பின் மூலம் கிராம நிரவாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆவின் ஆய்வக உதவியாளர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பதவிகள் குரூப் 4 தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் நேரடி நேர்காணல் இல்லாமல் வேலையில் சேர்ந்து கொள்ளலாம்.
நேர்காணல் இல்லாமல் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படுவதால், அரசு பணியில் சேர வேண்டும் என கனவுடன் இருக்கும் லட்சக்கணக்கான தேர்வர்கள் எப்போது முடிவுகள் வெளியிடப்படும் என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அந்த நிலையில் தீபாவளி போனஸாக முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அரசு அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் www.tnpscresults.tn.gov.in , www.tnpscexams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது.