டி என் பி எஸ் சி குரூப் 2 தேர்வு முடிவுகள்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான ஆள்சேர்ப்பு டி என் பி எஸ் சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குரூப் 2/2 ஏ தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் பல்வேறு துறைகளில் 5413 பதிவுகளுக்கான குரூப் 2/2ஏ முதல் நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடந்தது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு ஒட்டுமொத்தமாக 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர் இதில் 9.94 லட்சம் பேர் தேர்வு எழுதினர். முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு வகைகள் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்துவதில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டியிருந்ததால் முடிவுகள் வெளியாவதில் தாமதமானது.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி பிரதான தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.